பெண்களுக்கு ஆடை சுதந்திரம் கிடையாதா? | Iran Hijab Issue Explained | Voice Of Victim | Avalglitz

thumb_upLike
commentComments
shareShare

ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கலாச்சார போலீஸ்

null

இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் 'கலாச்சாரப் பிரிவு' ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.

படுகொலை

null

இப்படியாக இருக்கையில் நான்கு நாட்களுக்கு முன்னர் குர்திஸ்தானை சேர்ந்த 22 வயதான பெண் மாஷா அமினி தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.

போராட்டம்

null

இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் \ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவமனை தெரிவிக்கிறது. ஆனால் போலீஸ் அடியால் தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக அவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

null

தற்போது இதனைத் தொடர்ந்து, இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்கள் தலைமுடியை கத்தரித்தும், ஹிஜாப்பை எரித்தும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். நேற்று தலைநகர் தெஹ்ரானில் இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, குர்திஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

null

இந்த உயிரிழப்புக்கு பயங்கரவாத குழுக்கள்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது தெஹ்ரானில் உள்ள முக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் ஹிஜாப்

null

சில மாதங்களுக்கு கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் பள்ளி, கல்லுரிகளுக்குள் மதம் சம்பந்தப்பட்ட அடையாளத்துடன் வரக்கூடாது என்று இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றனர். ஆனால் அதை எதிர்த்து சில பெண்கள் இது எங்களின் உரிமை என்றனர். அவரவர் மத நம்பிக்கைகளில் யாரும் தலையிட கூடாது என பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இன்று ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி ஒரு பெண்ணை அடித்தே கொலை செய்துள்ளனர் ஈரானில்.

உடை அரசியல்

ஒரு பெண்ணின் உடை தான் ஒரு ஆணின் கிளர்ச்சியை தூண்டி தவறுக்கு நடப்பதற்கு வழி வகுக்கிறது என கூறி தன் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உடை அரசியலை உருவாக்கினார். ஆனால் ஒரு மாத குழந்தைகளைக்கும் சரி, 80 வயது பாட்டிக்கும் சரி இங்கு அநியாயம் நடக்கிறது. அதற்கு ஆடை தான் காரணமா? இல்லவே இல்லை.

ஒரு பெண் அவளுக்கு விருப்பப்பட்ட உடையை அணியலாம். அதை தவறாக பார்க்கும் கண்களும், மனதும் தான் மாற வேண்டும்.

ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை புடவை தான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இன்று சில இடங்களில் நாம் 80 வயதுள்ள கணவனை இழந்த தாய்மார்களை அந்த கோலத்தில் பார்க்க முடியும். காலப்போக்கில் அதெல்லாம் மாறி இன்று கணவனை இழந்த பெண்கள் முன்பு எப்படி இருந்தார்களோ அதே மாதிரி இருக்கலாம் என்ற சூழல் நம் சமுதாயத்தில் வந்துவிட்டது.

சமுதாயத்தில் மாற்றம் வந்துவிட்டது. நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கும் பெண்ணின் ஆடைக்கும் சம்பந்தமில்லை என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close