Divorce-க்கு பின் மாறிய என் வாழ்க்கை : Indu Exclusive Interview About Her Journey With Divorce

thumb_upLike
commentComments
shareShare

உடைந்ததை சரிசெய்ய அல்லது ஒரு வடுவை குணப்படுத்த சிறந்த வழி எது?

நாம் மட்பாண்டங்களைப் பற்றி பேசினால், ஜப்பானியர்கள் இந்த கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிண்ட்சுகி மூலம், அவர்கள் விரிசல் வழியாக தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினம் கலந்த அரக்குகளை ஊற்றுகிறார்கள். நீங்கள் திரும்பப் பெறுவது உங்கள் பழைய பானையின் சிறந்த மற்றும் அழகான பதிப்பாகும். வடு அழிக்கப்பட்டிருக்காது, ஆனால் அது உங்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறது மற்றும் அது முடிவல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது.

அதேபோல் நம் மனங்களை பற்றி பேசினால், உடைந்த மனதை சரி செய்யும் குயவனாக இருக்கிறார் இந்து கோபால்.

null

சென்னையில் மனித வள நிபுணராக பணிபுரியும் இந்து, விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குடும்ப துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கான ஆதரவு குழுவான ப்ராஜெக்ட் கிண்ட்சுகியை நடத்தி வருகிறார். "Project Kintsugi என்பது சேதத்தை மறைப்பதல்ல, ஆனால் சேதத்திலிருந்து அழகான ஒன்றை உருவாக்கி அந்த வடுக்களை சொந்தமாக்குவது பற்றியது" என்கிறார் இந்து.

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக, இந்து இந்த குழு கூட்டங்களை நடத்தி, வக்கீல்கள், மருத்துவர்கள், தெரபிஸ்ட் மற்றும் மன ஆலோசகர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறார். இதன் மூலம் குடும்ப பந்தத்தில் கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்கள், பலரும் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்.

புராஜெக்ட் கிண்ட்சுகி இந்துவுடன் ஒரு நேர்காணல்

என்னுடைய குடும்பம்

null

ஒரு ஸ்ட்ரிக்ட்டான தமிழ் குடும்பத்தில் பிறந்தவள் நான். என்னை ஸ்ட்ரிக்ட்டாக வளர்த்தார்கள், இருந்தாலும் என் வீட்டில் நானும் என் அண்ணனும் வேலைகளை பிரித்து தான் செய்வோம். என் அம்மா எழுவதற்கு முன் என் அப்பா எழுந்து காபி போடுவார். அப்படி தான் எல்லார் வீட்டிலும் இருக்கும் என நான் நினைத்து விட்டேன்.

என்னுடைய கல்யாணம்

null

எனக்கு 23 வயதில் திருமணம் ஆனது. வீட்டில் திருமணம் செய்து கொள்ள சொல்லி சொன்னார்கள், எனக்கு திருமணம் குறித்தோ அதன்பின் இருக்கும் வாழ்க்கை குறித்தோ எந்த புரிதலும் இல்லை. திருமணம் ஆனதிலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டேன்.

விவாகரத்து

null

ஒருவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்துவது தான் DOMESTIC VIOLENCE என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் தவறாக நடத்தினாலோ, சந்தகப்பட்டாலோ அதுவும் தவறு தான் என்னும் பக்குவம் எனக்கு அந்த வயதில் இல்லை. என் கணவர் என்னை அடிக்கும்போது ஒவ்வொரு முறையும் இது நார்மலானது என என்னை நானே சமாதானப்படுத்தி கொண்டேன். ஆனால் போக போக தான் அது தஹ்வ்று என புரிந்தது.

என் நண்பர்களிடமோ என் பெற்றோரிடமோ கூட நான் இதை பகிரவில்லை, காரணம் நாளை எங்களுக்குள் அனைத்தும் சரியாகி விடலாம். ஆனால் பெற்றோர் மனதில் அது தானே என்றும் இருக்கும். அதனால் என் மாமியார் மாமானாரிடம் கூறினேன். அவர்களோ அவனை ஏன் அடித்தாய் என கேட்காமல், அவன் அடிக்கும் அளவிற்கு நீ என்ன தப்பு செய்தாய் என என்னை தான் அவமானப்படுத்தினார்கள்.

2016-ல் நான் அவரிடம் இருந்து பிரிந்தேன், ஆனால் முழுமையாக எனக்கு விவாகரத்து கிடைத்தது 2018-ல் தான்.

என்னை மாற்றிய விவாகரத்து

null

எனக்கு வக்கீலிடம் சென்று என்ன சொல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும், எதுவுமே எனக்கு தெரியாது. ஒரு செக்யூரிட்டிகாக போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க கூட நான் என் பெற்றோரை அழைத்து செல்லவில்லை. அனைத்தையும் நானே செய்தேன். பெரிய போராட்டத்திற்கு பிறகு எனக்கு விவாகரத்து கிடைத்தது.

கஷ்டமான காலக்கட்டம்

null

விவாகரத்து ஆன சமயத்தில் என் பெற்றோர் வீட்டில் இருந்தேன். அப்போது வெளியே கூட செல்ல மாட்டேன். கல்யாண வீட்டிற்கு செல்ல மாட்டேன், நவராத்திரி வந்து விட்டால் ஊரிலேயே இருக்க மாட்டேன்.

தெரபி

null

நான் என்னை மாற்ற தெரபி சென்றேன், தெரபி என்னை மாற்ற எனக்கு உதவி செய்தது.

என் வாழ்க்கை மாறியது

null

இப்படி இருந்த என் வாழ்க்கை முற்றிலுமாக மாறி விட்டது. நான் கிண்ட்சுகி மூலம் பல பெண்களுக்கு உதவி செய்கிறேன், அப்போது என் கடந்த காலத்தை பற்றி பேசுவதுண்டு, அப்போது பலர் என்னிடம் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை பற்றியே பேசி கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி திருமணம் ஆகும் என கேட்டனர். கடவுளின் அருளால் மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் ஆனது. நல்ல வாழ்க்கை துணை எனக்கு கிடைத்துள்ளார், அவரின் குடும்பமும் அவ்வளவு நல்லவர்கள்.

என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது கிண்ட்சுகி அமைப்பின் இந்து என்று தான் அறிமுகப்படுத்துவார், அப்படியே HR ஆகவும் வேலை செய்கிறார் என கூறுவார். என் வாழ்க்கை இப்படி நல்ல விதமாக மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை.

கிண்ட்சுகி

null

இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு கெட்ட திருமண வாழ்க்கைக்கு பின் ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என கிண்ட்சுகி மூலம் ஆலோசனை கொடுத்து வருகிறேன். இது ஆரம்பித்தது ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்வு, 2019-ல் ABUSIVE MARITAL LIFE குறித்து என் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தேன். அதன்பின் எனக்கு பலர் மெசேஜ் செய்து அவர்களின் வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள் ஒரு பெண் எனக்கு நடு இரவில் போன் செய்து தற்கொலை எண்ணங்கள் வந்ததால் போன் செய்ததாக கூறினார், அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். மறுநாள் காலை எனக்கு போன் செய்து நீங்கள் எனக்கு தக்க சமயத்தில் ஆறுதல் சொல்லாமல் இருந்திருந்தால்  நான் இறந்திருப்பேன் என்றார். அப்போது தான் என்ன ஆனாலும் இந்த சேவையை தொடர வேண்டும் என எண்ணினேன்.

கிண்ட்சுகி ஆப் உள்ளது, அதில் ஆயிரக்கணக்கான டாக்டர்ஸ், தெரபிஸ்ட், ஆலோசகர்கள், வக்கீல்கள் உள்ளனர். திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட, அடுத்து என்ன செய்வது என தெரியாதவர்கள் அந்த ஆப் மூலம் பயன்பெறலாம். எங்களின் அமைப்பு பெண்களுக்கானது என்றாலும் எங்களின் ஆப்பை ஆண்கள், பெண்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்

null

வெளியே அனைவரும் நன்றாக இருப்பது போல் இருப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் அனைத்து பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்வார்கள். உங்களுக்கு தெறிந்தவர்கள் இப்படி இருந்தால் அவர்களுக்கு துணையாக, பக்கபலமாக இருங்கள். மனிதர்கள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்தாலே போதும் எவ்வளவு பெரிய கஷ்டத்தில் இருந்தும் மீண்டு விடலாம். நான் இப்போது இந்த வேலையை தான் செய்து வருகிறேன், பெண்களுக்கு வழிகாட்டுகிறேன்.

ஒரு விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் செய்து கொள்ளுங்கள், மற்றவர்கள் சொல்கிறார்கள் என்றோ இல்லை மற்றவர்களின் சந்தோசத்திற்காகவோ எதையும் செய்யாதீர்கள் என்கிறார் இந்து கோபால்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close