குழந்தைகளை மொபைல் போனில் இருந்து மீட்பது எப்படி ?

குழந்தைகளை மொபைல் போனில் இருந்து மீட்பது எப்படி ?
thumb_upLike
commentComments
shareShare

இன்றைய தலைமுறையிடம் மொபைல் போனின் தாக்கம் அதிகமாக உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மொபைல் போனிற்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

null

பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் மொபைலிலேயே வந்து விட்டது. இப்படி நாளுக்கு நாள் மொபைல் போனின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இப்படி தினமும் நாம் அதிக நேரம் செலவிடும் டிஜிட்டல் திரையால், பார்வைக் குறைபாடு போன்ற பல வகையான உடல்நலக் பிரச்சனைகள் ஏற்படும்.

பேச்சுத்திறன், செயல்திறன், உடலுறுப்பு வளர்ச்சி போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனில், சிறியவர்களின் நிலைமை ?

தொடர்ச்சியாக டிஜிட்டல் திரையை பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என டாக்டர் ஜெ.ஷியாமளா விவரிக்கிறார்.

null

குழந்தைகளுக்கு பிறந்த நான்கு மாதங்கள் கழித்து பேசும்திறன், கேட்கும்திறன் போன்றவை வளர்ச்சி பெறத் தொடங்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் திரைகளை காண்பித்தால், அவர்களின் வளர்ச்சி தடைபடும்.

உடல் பருமன் அதிகமாகும், அவர்கள் வளர வளர நடத்தையில் மாற்றம் ஏற்படும். சிலர் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் காண்பிப்பது உண்டு. அதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் அவர்களை வெளியில் அழைத்துச் சென்று இயற்கையை கண்பித்து, அவர்களுடன் விளையாடி சாப்பாடு ஊட்ட வேண்டும். மொபைலை மறக்க ஒரே வழி இதுதான். இதை தவிர சிறந்த உபாயம் வேறு எதுவுமில்லை.

null

சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால், இன்னும் ஆபத்து. அவர்கள் எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும். பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் தான் குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்கள் உபயோகிப்பதை எப்படி தவிர்க்க இயலும் என டாக்டர் ஷியாமளா கூறுகிறார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close