என்னோட Videos-அ Website -ல போடமாட்டான்னு என்ன நிச்சயம் : Girl Complaint About Vikram Vedagiri Psycho

thumb_upLike
commentComments
shareShare

விக்ரம் வேதகிரி என்னும் சைக்கோ தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளான், ஒரு காமகொடுரனை தகுந்த ஆதாரங்கள் இருந்து எப்படி வெளியே விடலாம் என அவனின் காதலி காட்டம் தெரிவித்துள்ளார்.

 

விக்ரம் வேதகிரி என்னும் சைக்கோ

null

கடந்த ஜூன் மாதம், சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் தன்னைபோல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதாகவும், தனது இச்சைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி காதலன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தி இருந்தார். அதன்பின் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றேன்.

null

சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் விக்ரம் வேதகிரி என்பவர், எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமானார். அவர், முதலில் எனது வேலை சார்ந்த விஷயங்களை பேசத் தொடங்கினார். இதையடுத்து எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றது உட்பட என் சொந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார்.

ரகசிய திருமணம்

null

இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு என்னை நேரில் சந்திக்கத் தொடங்கிய விக்ரம், என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவரது காதலை முதலில் மறுத்த நான், நாளடைவில் அவரின் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி காதலை ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், என்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டார்.

அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டில் வந்து தங்கியதுடன் ஊரறிய விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர், தனது பாலியல் இச்சைகளை என் மீது திணித்து பல வழிகளில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார்.

கொடுமை

null

அதற்கு நான் உடன்பட மறுத்தால் என்னை தாக்கினார். அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் காவல்துறையை நாடியபோது விக்ரம் என்னை மன்னித்து விடுமாறு கூறி என்னை புகார் அளிக்கவிடாமல் தடுத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து விக்ரம் என்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது, தன்னிடம் சொல்லாமல் எனது லேப்டாப்-ஐ உடன் தலைமறைவாகி விட்டார்.

பின்னர் எனது சகோதரர் மூலம் பேசி லேப்டாப்-ஐ திரும்பக் கேட்டபோது எங்களை மிரட்டிய விக்ரம் 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டே லேப்டாப்-ஐ திருப்பிக் கொடுத்தார். அதேபோல காதலிக்கத் தொடங்கியது முதல் ரகசியமாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தது வரை என்னிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்று விக்ரம் செலவு செய்துள்ளளார்.

ஆபாச புகைப்படங்கள் / வீடியோக்கள்

null

இதையடுத்து விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை தனது வீட்டில் விட்டுச் சென்றார். அதை சரிசெய்து அதிலிருந்த ஆபாச புகைப்படங்களையும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவரிடம் திரும்பப் பெற்ற தனது லேப்டாப்பில் இருந்து அவரது மின்னஞ்சல் மூலம் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாச படங்களை நான் கண்டறிந்தேன். குடும்பச் சூழலில் சுணக்கம் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்புகொண்டு ஆபாச சேட்டைகளை விக்ரம் செய்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும். விக்ரம் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து அவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

ஜாமினில் விடுதலை

null

இதையடுத்து போலீஸ் அவனை கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட அந்த கொடூரன் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளான். அவனை போலீசார் எதற்கு ஜாமினில் விடுவித்தனர். ? வெளியே வந்து என்ன செய்ய போகிறான். முதலிலாவது தவறு செய்கிறோம் என்றாவது ஒருநாள் மாட்டிவிடுவோம் என்ற பயம் இருக்கும், இப்போது aஅந்த பயமும் இருக்காது.

போலீசாரின் அஜாக்கிரதை

null

அவனுடைய மெயில் டிரைவில் பல வீடியோக்கள் இருப்பதை போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்களுக்கு அது குறித்த புரிதலே இல்லை. சரி சைபர் க்ரைமில் அவன் மீது வழக்கு பதிந்து அவர்கள் விசாரித்து இருக்க வேண்டும், ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை. காவல்துறை ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக உள்ளார்கள் என புரியவில்லை. வெளியே வந்து என் வீடியோவை வெளியிட மாட்டான் என்பது என்ன நிச்சயம் ?

அவனுக்கு ஏன் உதவுகிறார்கள் ?

null

ஆனந்த ரேஷ்மி என்ற பெண் என்னுடைய தோழியாக இருந்தால், அவளும் அவள் கணவரும் சேர்ந்து தான் இவனை ஜாமினில் வெளியே எடுத்துள்ளார்கள். ஒரு பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பது சரியாகி விட்டது. அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை.

கல்யாணம் ஆனால் சரியாகி விடும் என ஆனந்த ரேஷ்மி என்னை பலமுறை சமாதனாம் செய்துள்ளார். இன்று அவனை ஜாமினில் வெளியே எடுத்துள்ளார்கள். ஒரு குற்றவாளிக்கு உதவி செய்து பாதிக்கப்பட்ட பெண் மீது ஏன் அவதூறு பரப்புகிறார்கள் என தெரிய வேண்டும். பணத்திற்காகவா இல்லை அவர்களுக்குள் வேறு ஏதேனும் டீலிங்கா என தெரியவில்லை. ஆனால் ஏன் ஒரு குற்றவாளிக்கு உதவி செய்கிறார்கள் என தெரிய வேண்டும் என கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close