என்ன பத்தி போடுற Memes எனக்கு பிடிக்குமா ? : Actress Laila Fun Filled Interview | Sardar

thumb_upLike
commentComments
shareShare

தில், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் என பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் லைலா. கன்னக்குழி அழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட லைலா தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

null

இரண்டு குழந்தைகளுக்கு தாயான லைலா பதினாறு வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சர்தார் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். குழந்தைத்தனமான துறுதுறு லைலாவை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு பக்குவமான கேரக்டரில் நடித்து ஆச்சர்யத்தை தந்தார்.

லைலா உடன் ஒரு நேர்காணல்

திருமணத்திற்கு பின் சினிமாவை விட காரணம்

null

திருமணத்திற்கு பின் நான் நடிக்கவில்லை, இப்போது பதினாறு வருடங்கள் கழித்து சர்தார் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளேன். திருமணத்திற்கு பின் நடிக்காததற்கு காரணம் உண்டு. குடும்பம் என்று ஒன்று உள்ளது, அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். என் குழந்தைகளுடன் இருக்க விரும்பினேன், அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன்.

என் கணவர் என் படங்களை பார்த்ததில்லை

null

என் கணவர் நான் நடித்த படங்களை பார்த்ததில்லை நானும் பார்க்க சொன்னதில்லை. நான் நடித்த இன்சான் என்ற ஹிந்தி படத்தை மட்டும் பார்த்தார். அதேபோல் மற்ற படங்களின் காட்சிகள் மட்டும் பார்த்துள்ளார். ஆனால் அதை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை.

எனக்கு சோசியல் மீடியா ரொம்ப பிடிக்கும்

null

எங்கள் காலத்தில் சோசியல் மீடியா இல்லை, ஆனால் இப்போது உள்ளது. எனக்கு சோசியல் மீடியா ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணம் உண்டு, சர்தார் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் எனக்கு மெசேஜ் செய்தனர், நேரடியாக அவர்களின் எண்ணங்களை நானே தெரிந்து கொள்ள முடிகிறது. பிடித்தது என்றால் சொல்கிறார்கள், அதேபோல் பிடிக்கவில்லை என்றாலும் சொல்கிறார்கள்.  இந்த வாய்ப்பு நான் கதாநாயகியாக நடிக்கும்போது எனக்கு கிடைக்கவில்லை.

ரசிகர்களின் அன்பு

null

கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து நான் நடிக்க வந்துள்ளேன், இருந்தாலும் மக்கள் என்னை மறக்கவில்லை. அவ்வளவு அன்பு கொடுக்கிறார்கள், நான் சந்தோசமாக உள்ளேன். எனக்கு ஒரு ரசிகர் கமெண்ட் செய்தார் அதில், உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா, லைலாவுக்கு கிட்சனில் சமைக்க பிடிக்கும் என்றால் நான் துடைப்பானாகவோ இல்லை ப்ளோர் மேட்டாக கூட இருப்பேன். பதினாறு வருடங்கள் ஆகி இருந்தாலும் நங்கள் உங்களை மறக்கவில்லை, லைலா என்றும் லைலா தான் என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த மாதிரியான அன்பு எனக்கு பிடிக்கும் என சிரிப்புடன் கூறுகிறார் லைலா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close