கேரள பெண் அர்த்திகா தமிழில் ..ஏன்? Serial Actress Arthika Exclusive Interview

thumb_upLike
commentComments
shareShare

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த அந்த வகையில் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் கார்த்திக் ராஜ்.

null

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் அர்த்திக்கா நடிக்கிறார்.

கார்த்திகை தீபம் அர்த்திக்கா புதுமுகம், அவருடன் ஒரு நேர்காணல்.

பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளா.

null

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா தான். நான் மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளேன். அதனால் தமிழ் கொஞ்சம் நன்றாக பேசுவேன்

கார்த்திகை தீபம் வாய்ப்பு

null

இந்த சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணமாக இருந்தது சேது பட நடிகை அபிதா தான். நான் ஏற்கனவே ஒரு சீரியலில் நடிக்க வேண்டியிருந்தது அப்போது அந்த வாய்ப்பு தவறி போனது, அதன்பின் அபிதாவால் இந்த சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கார்த்திக்கை எனக்கு நன்றாக தெரியும்

null

இந்த சீரியலில் கதனாயாகனாக நடிக்கும் கார்த்திக்கை எனக்கு இதற்கு முன்பே தெரியும். அவரும் நானும் ப்ளாக் அண்ட் ஒயிட் என்ற படத்தில் நடித்துள்ளோம், அது இன்னும் ரிலீசாகவில்லை. கார்த்திக்கை எனக்கு முன்பே தெரியும் என்பதால் என்னிடம் நன்றாக பேசுவார்.

கருப்பாக இருந்தால் என்ன

null

இந்த சீரியலில் தீபா என்ற ரோலில் நான் நடிக்கிறேன், நான் நிஜத்தில் கலராக இருப்பேன், ஆனால் இந்த கதாப்பாத்திரத்திற்கு நான் கருப்பாக இருக்க வேண்டும். சூட்டிங் நடக்கும்போது, ஒருத்தர் என் அத்தையிடம் என்னைப் பார்த்து பாவம் இந்த பெண் கருப்பாக இருக்கிறாள் என வருத்தப்பட்டுள்ளனர்.

கருப்பாக இருக்கும் பெண்கள் எவ்வளவு கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்திக்கின்றனர் என அபோது தான் புரிந்து கொண்டேன்.

இவ்வாறு தன்னை பற்றியும், கார்த்திகை தீபம் சீரியல் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார் அர்த்திக்கா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close