தினம் தினம் ஏதாவது பிரச்சனை என்னை தேடிவருது | Nayanthara Exclusive Interview

thumb_upLike
commentComments
shareShare

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்.

null

அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். நடிகை நயன்தாரா நடித்து இருக்கும் கனெக்ட் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

null

நடிகை நயன்தாரா, முன்னணி ஹீரோயினாக உயர்ந்த பிறகு பட விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். தான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவர் விளம்பரங்களுக்கு வர மாட்டேன் என சொல்லிவிடுகிறார். விளம்பரங்களில் நோ என சொல்லிவிட்டு தான் அவர் படத்தின் ஸ்கிரிப்ட் கேட்பார் என சொல்லப்படுகிறது.

null

ஆனால் தனது தயாரிப்பு நிறுவன படமாக இருந்தால் மட்டும் அவர் விளம்பரத்திற்கு சரி என ஒற்றுக் கொள்கிறார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார் நயன்தாரா. அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அவர் கூறியிருந்தார். அதோடு திருமண வாழ்க்கை குறித்து, தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்தும் நயன்தாரா பேசியுள்ளார்.

ஏன் பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை

null

நயன்தாரா பேசுகையில், “இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய இருக்கிறது. என்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களே நிறைய வந்தது. அப்போது ஏன் ஹீரோயின்ஸுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறது என நின்னைப்பேன். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ லாஞ்சுக்கு போனால் கூட நம்மை எங்கயாச்சும் ஓரமாக நிக்க வச்சிருவாங்க.

நாயகிகளுக்கு பெரிய அளவில் மதிப்பு இருக்காது. ஹீரோயின்களை பற்றி அதிகமா பேச மாட்டார்கள். அதனால் தான் நான் பட விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தேன். நாம் ஒரு நல்ல இடத்திற்கு வந்த பின்னர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணினேன்.

ஆனால் நான் அதை பாலோ பண்ணவில்லை. சினிமாவில் பெண்களும் சமமா பார்க்கப்பட வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அப்போ அது நடக்கவில்லை, ஆனால் இப்போ நிறைய படங்கள் பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது.

இப்போ நிறைய தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன் வருகிறார்கள். இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அது போன்ற படங்களில் தான் நானும் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

இன்டர்வெல் கிடையாது

null

பெண்களுக்கு திருமணம் என்பது இன்டர்வெல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை. திருமணம் ஒரு ஹாப்பி ஃபீலிங் அவ்வளவு தான். அதன் காரணமாக பெண்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.

பேய் பயம் இருக்கா

null

நடிகை நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாக உள்ள கனெக்ட் படம் ஹாரர் படம் என்பதால், நயன்தாராவுக்கு உண்மையிலேயே பேய் மீது நம்பிக்கை இருக்கா? என்றும் பேய் பயம் இருக்கா என டிடி நீலகண்டன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு அவரது பதில்களை அழகாக வெளிக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என சொன்ன நயன்தாரா அடுத்தடுத்து பேசியது தான் ரசிகர்களை திகில் அடைய செய்தது.

சின்ன வயசுல யாரோ சொன்னதை கேட்டுட்டு அதன் பின்னர் மல்லாக்க படுக்கவே மாட்டேன், ஒன் சைடாக கை வச்சுத் தான் தூங்குவேன் என நயன் சொன்னதும் ஏங்க என கேட்ட டிடிக்கு செம ஷாக் கொடுத்தார் நயன்தாரா. நேரா படுத்தா யாராவது நம் மேல வந்து அப்படியே இறங்கிடுவாங்களாம்னு சொன்னதை கேட்டதுமே டிடிக்கு அல்லு இல்லை.

ஏதாவது பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது

null

அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன்.

ஆசீர்வதிக்கப்பட்டவள் நான்

null

என் வாழ்க்கையே கடவுள் எனக்கு கொடுத்த மிகபெரிய பரிசு என்று தான் சொல்வேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். என் குடும்பம், என் ரசிகர்கள் இவை அனைத்தும் எனக்கு கிடைத்த வரங்கள் என்றார் நயன்தாரா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close