மீடியாவில் ஆணாதிக்கம் உள்ளதா ? ஈரமான ரோஜாவே ஸ்வாதி ஓப்பன் டாக்

thumb_upLike
commentComments
shareShare

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் சுவாதி. தற்போது, பெங்களூரில் வசித்து வருகிறார். கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட நான்கு கன்னட படத்தில் நடித்திருக்கும் இவர் யாரிவாலு என்கிற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர் தமிழில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

null

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தத் தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 150 எபிசோட்களை கடந்திருக்கும் இந்தத் தொடரில் `பிரியா' என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்திருக்கிறார் சுவாதி.

null

ஈரமான ரோஜாவே சீரியலில் தன்னுடைய ப்ரியா கதாப்பாத்திரம் குறித்தும், மீடியாவில் அவரின் பயணம் குறித்தும், கல்யாணம் குறித்த அவரின் எண்ணங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சீரியலில் இருக்கும் ப்ரியா நிஜமல்ல

null

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் நான் நடித்துல் ப்ரியா கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடித்துள்ளது. ஆனால் சீரியலில் வரும் ப்ரியா போல் நான் நிஜத்தில் இல்லை. ப்ரியா அமைதியாக, யாரிடமும் பேசாமல் இருக்கும் கதாப்பாத்திரம், ஆனால் நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பேன். என்னை சுற்றி ஆட்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

சீரியலில் வரும் ப்ரியாவும் நானும் வேறு வேறு குணங்களை கொண்டவர்கள். ஆக்சன் என சொன்னால் நான் பிரியாவாக மாறி விடுவேன், மற்ற நேரத்தில் நான் ஸ்வாதி தான்.

கல்யாணம்

null

நான் கல்யாணம் குறித்து சிந்திக்கவே இல்லை, சொல்லப்போனால் கல்யாணம் வேண்டாம் என்ற முடிவில் உள்ளேன். ஒருவேளை கல்யாணம் என்றால், நல்ல புரிதல் இருக்க வேண்டும் இருவருக்கும். நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் என்னை அனுமதிக்க வேண்டும். புரிதல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம்.

ஆண்களிடம் எனக்கு பிடித்த குணம்

null

நான் நிஜமாக சொல்கிறேன், ஆண்களுக்கு கோபம் வருவது குறைவு. பெண்கள் தான் கோபப்பட்டு, சண்டை போடுபவர்கள். ஆண்கள் அமைதியாக இருப்பார்கள், கோபப்பட மாட்டார்கள். பெண்கள் தான் அவர்களை கோபப்பட வைக்கிறோம். அந்த குணம் ஆண்களிடம் எனக்கு பிடிக்கும்.

மீடியாவில் ஆணாதிக்கம் உள்ளதா ?

null

ஆணாதிக்கம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஆணாதிக்கம் இருந்தால் பெண்கள் இங்கு இருக்கவே மாட்டார்கள். ஆண்களுக்கு இணையாக மீடியாவில் பெண்களும் உள்ளனர், அதனால் ஆணாதிக்கம் இல்லை என்று தான் நான் சொல்வேன். இதுவரை நாம் அப்படி எதையும் சந்திக்கவில்லை. மீடியா பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தான்.

இவ்வாறு பல விஷயங்ககளை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஸ்வாதி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close