நான் Doctor-ஆ இல்லையா ? - உண்மையை சொன்ன டெய்சி : Dr Daisy Thangaiya Exclusive Interview | Suriya Bjp

thumb_upLike
commentComments
shareShare

பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூர்யா, ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாஜகவின் தமிழக நிர்வாகிகளான டெய்சி, திருச்சி சூர்யா இடையேயான ஆபாச பேச்சு குறித்த கட்சி ரீதியான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அக்கா, தம்பியாக இணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.

பா.ஜ.க சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் டெய்சி தங்கையாவுடன் ஒரு நேர்காணல்.

நான் மருத்துவர் இல்லையா

null

நிறைய பேர் என்னை மருத்துவரே இல்லை என்கிறார்கள், முதலில் அதற்கு நான் விளக்கம் கொடுத்து விடுகிறேன். நான் HEREDITARY MEDICAL PRACTITIONER, அதாவது பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்கிறோம், அதற்கான செர்டிபிகேட் கூட என்னிடம் உள்ளது.  

என் குடும்பம்

null

நான் ஒரு சிங்கிள் மதர். என் கணவரை பிரிந்து வாழ்கிறேன். எனக்கு இரு மகள்கள் உள்ளனர், பெரிய மகள் ரோமிகா, இளையவள் ஷர்மிகா. இது தான் என்னுடைய குடும்பம்.

ட்ரெண்டிங்கில் மகள்

null

ஷர்மிகா உங்களுக்கு தெரிந்திருக்கும். யூ.ட்.யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளாள். அவள் ஒரு சித்தா டாக்டர். அவள் பேசுவது அனைவருக்கும் பிடித்துள்ளது. சிறுவயதில் இருந்து நான் சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளேன், வெள்ளை சக்கரை பயன்படுத்த கூடாது, இது சாப்பிட வேண்டும், இது செய்ய கூடாது என்று. இப்பொது அவர்கள் அதை பின்பற்றுகிறார்கள்.

மகள்கள் சப்போர்ட்

null

நான் என் கணவரிடம் இருந்து பிரிய வேண்டும் என்று சொன்னபோது என் மகள்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என்னை புரிந்து கொண்டார்கள். பத்து வருடத்திற்கு முன்பே நான் பிரிந்திருக்க வேண்டும், ஆனால் இப்போது தான் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த முடிவை எடுத்தேன்.

தனிமை தான் கஷ்டம்

என் வீட்டை பொறுத்தவரை கணவனிடம் சண்டையிட்டு பெற்றோரிடம் செல்ல கூடாது. என் அம்மா சிறுவயதில் இறந்து விட்டார், அப்பா மட்டும் தான். ஆனால் அப்பா சொல்லிவிட்டார், கணவனிடம் சண்டையிட்டு இங்கு வரக் கூடாது என்று. இந்த முடிவை எடுக்கவே பல வருடங்கள் ஆனது. என்ன ஒன்று கிளினிக், கட்சி வேலைகள் அனைத்தும் முடித்து வீட்டுக்கு வந்தால் தனிமையில் தான் இருக்க வேண்டும். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

ஷர்மிகாவின் கல்யாணம்

null

ஷர்மிகா இளையவள் ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. பெரியவாளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஷர்மிகா காதலிப்பதாக சொல்லும்போது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தருண் எனக்கு தெரிந்த பிள்ளை தான். சிறுவயதில் இருந்து தெரியும்.

மாப்பிள்ளை பார்க்கும் போது இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும்

null

தருண் நல்ல வசதியான வீட்டு பையன் தான். ஆனால் நான் மாப்பிள்ளை பார்க்கும்போது வசதி எல்லாம் பார்க்கவில்லை. நல்லவனாக இருக்க வேண்டும், குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும். அதற்கேற்றார் போல் அவர்களும் இருந்தார்கள். நல்ல குடும்பம் அதனால் சந்தோசமாக உள்ளது.

எப்படி இவ்வளவு பொறுமை

null

பொறுமையாக தான் இருக்க வேண்டும், நமக்கு மேல் உள்ள இறைவன் அனைத்தையும் பார்த்துப்பான் என்ற எண்ணம் வேண்டும். என் பிள்ளைகள் தான் இந்த ஆடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் நான் புரிய வைத்துள்ளேன். அனைத்தையும் இறைவன் பாத்துப்பார்.

பொறுமை தான் ஆனால் நான் போராளி

என் குடும்பம், நண்பர்கள் இவற்றில் நான் பொறுமை தான், ஆனால் எனக்குள் ஒரு போராளி உள்ளாள். சமூகத்துக்காக நான் பணியாற்றும்போது நான் போராளி தான்.

ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தவறு என்று சொல்லக் கூடாது

null

ஒரு நிறுவனத்தில் ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி தவறு சொல்ல முடியும். என் கட்சி எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருக்கும். மாநில தலைவர் அண்ணாமலை சப்போர்ட்டாக இருந்தார்.

எதனால் மன்னித்தேன்

null

நான் சூர்யா சிவாவை மன்னித்ததற்கு காரணம் உண்டு, மன்னிப்பு கேட்டார் இருந்தாலும் அவர் பேசியது மன்னிக்க கூடிய விஷயம் அல்ல. ஆனால் நான் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளேன், அவர் குடும்பத்தாரை எனக்கு நன்றாக தெரியும். அவர் மனைவி, பிள்ளைகள் என அத்தனை பெரும் கண்முன் வந்து சென்றார்கள். அதற்காக தான் மன்னித்தேன்.

பா.ஜ.க-வில் சம்பாதிக்க முடியாது

null

எல்லோரும் பணம் உன்னை மாற்றி விட்டதா, பொட்டி கொடுத்து விட்டார்களா, பதவி ஆசையா என்றெல்லாம் பேசினார்கள். பா.ஜ.க-வில் சம்பாதிக்க முடியாது. அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பத்து ரூபாய் கூட இங்கே சம்பாதிக்க முடியாது.

காயத்ரியிடம் பேசினேன்

null

காயத்ரி இடம் நான் மூன்று முறை போனில் பேசினேன், அவர் எனக்காக பேசியதற்கு அவருக்கு நன்றியும் சொன்னேன். காயத்ரி தைரியமான பெண், அதே சமயம் நல்ல அன்பானவளும் கூட.

மனுஷங்களை நம்ப வேண்டும்

அரசியலில் குழி பறிப்பவர்களின் எண்ணிக்கை தான் ஜாஸ்தி. அதற்காக மனிதர்களை நம்பாமல் இருக்க முடியாது. நான் நம்புவேன், நீ நம்பிக்கை துரோகம் செய்தால் அது உன் பிரச்சனை. இதுதான் டெய்சி.

பெண்கள் ஒழுக்கத்தை தான் கேள்வி கேட்பார்கள்

null

நம் நாட்டின் சாபக்கேடு, பெண்களின் ஒழுக்கத்தை, கற்பை பற்றி பேசுவது. ஒரு ஆண் அனைத்து தவறும் செய்வான், அவனை யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். ஒரு பெண் வீடு கட்டினாலோ, கார் வாங்கினாலோ, வேலை செய்யும் இடத்தில் பெரிய பதவிகளுக்கு வந்தாலோ, நீ யாரோடோ இருந்து தான் இந்த இடத்திற்கு வந்தாய் என பேசிவிடுவார்கள். இது மிகவும் வருத்தமான விஷயம்.

பாராட்டு வாங்கினால், செருப்படியும் வாங்கணும்

நமக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள், அதேபோல் செருப்படியும் கொடுக்கிறார்கள். என்னுடைய அங்கீகாரம், என்னுடைய மரியாதை என் மருத்துவ துறையில் தான் உள்ளது.

ஏன் பா.ஜ.க-வில் இணைந்தேன்?

null

எனக்கு எப்போதும் தேசப்பற்று உள்ளது, நாடு முக்கியம் என நினைப்பவள் நான். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கொள்கை பிடித்து இந்த கட்சிக்கு வந்தேன். நம் மக்கள் இந்த பொய்யான திராவிடத்தில் ஊறிப் போய் உள்ளார்கள். திராவிடம் எழுதும் பத்திரிகைகளை மட்டும் படித்து அதுதான் நிஜம் என வாழ்கிறார்கள். அதி மாற்ற வேண்டும், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும், தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

பெண்களுக்கு அரசியலில் மரியாதை இல்லையா?

null

பெண்களுக்கு பா.ஜ.க கட்சியில் மட்டும் தான் மரியாதை கிடைக்கும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி பா.ஜ.க. நான் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்துள்ளேன். எனக்கு தெரியும் பெண்களுக்கு அங்கு என்ன மரியாதை என்று. பா.ஜ.க-வில் பழங்குடியின பெண்மணியான திரௌபதியை குடியரசு தலைவர் ஆக்கியுள்ளார்கள். நீங்கள் அனைவரும் கலாய்த்த தமிழிசை சவுந்தரராஜன் இன்று இரு மாநில கவர்னர், பிரதமர் அருகில் அமர்ந்துள்ளார் நிர்மலா சீதாராமன். திமிலங்களோடு போட்டியிட்ட ஜெயித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன். இது எல்லாம் பா.ஜ.க-வில் மட்டும் தான் முடியும். பெண்களுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பது பா.ஜ.க தான்.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கை குறித்து, சூர்யா சிவா குறித்தும், பா.ஜ.க குறித்தும் பகிர்ந்துகொண்டார் டெய்சி தங்கையா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close