How To Treat Pimples - Dr Archana | Acne Treatment , Skin Care Routine | Clear Marks , Dark Spots

thumb_upLike
commentComments
shareShare

அழகான முகத்திற்கு எதிரி என்றால் முகப்பரு தான். முகப்பருக்கள் எப்போதுமே பிரச்சனை தரக்கூடியவை தான். இதிலிருந்து சருமம் முழுமையாக விடுபட வேண்டும் என்றால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். விலை உயர்ந்த க்ரீம் வகைகளாக இருந்தாலும் கூட அவை முகப்பருக்களை மீண்டும் உண்டாக்கிவிடுகிறது.

null

இந்த முகப்பரு வந்தால் என்ன செய்வது, என்ன செய்ய கூடாது, எதனால் முகப்பருக்கள் உண்டாகிறது என நம்முடன் பகிர்ந்துள்ளார் டாக்டர் அர்ச்சனா.

யாருக்கு முகப்பரு வரும் ?

null

முகப்பரு வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இயற்கையாக ஆயில் ஸ்கின் உடையவர்களுக்கு முகப்பரு வரும், பெற்றோர்களுக்கு இருந்தால் வரும், அதேபோல் PCOD பிரச்சனை இருப்பவர்களுக்கு வரும். அதிகமாக பொறித்த எண்ணெய் உணவுகளை உட்கொள்ளும்போது முகப்பரு வரும்.

முகப்பரு வந்தால் என்ன செய்ய கூடாது ?

null

முகப்பரு வந்தால் அதன் மீது வைத்து கிள்ள கூடாது, பருக்களை கிள்ளுவதால் அது தழும்பாக மாறிவிடும்.

அதேபோல் லெமன், வினீகர், மஞ்சள் உள்ளிட்ட கிட்சன் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்த கூடாது. லெமன், வினீகர் உங்கள் சருமத்தை பாதிக்கும். மஞ்சள் போட்டு விட்டு வெளியே செல்ல கூடாது, அது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

null

இன்றைய கால பெண்கள் முகப்பரு வந்தால் செய்வது, அதன்மேல் டூத் பேஸ்ட் வைப்பது தான், இது தவறான விஷயம். டூத் பேஸ்ட்டை முகப்பருக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

என்ன செய்ய வேண்டும்

null

முகப்பரு வந்தால் அதன் மீது ஐஸ் கட்டிகளை வைக்கலாம். ஐஸ் கட்டிகள் முகப்பருவால் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தும்.

SALICYLIC ACID அடங்கிய பேஸ் வாஷ் பயன்படுத்துவது சிறந்தது.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

எந்த நேரத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டும்

null

முகப்பரு ஆரம்பிக்கும்போதே மருத்துவரை சந்திப்பது நல்லது. முகப்பரு வந்தால் பெற்றோர்கள் சொல்வது, இந்த வயதில் வருவது தான் இதற்கு ஏன் டாக்டரை பார்க்க வேண்டும் என்று. ஆனால் டாக்டரை சந்திப்பது நல்லது.

வீட்டிலியே பராமரிப்பது எப்படி

null

நான் முன் சொன்னது போல் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீரில் முக கழுவலாம். GLYCOLIC ACID, SALICYLIC ACID இவை இரண்டும் உள்ள பேஸ் வாஷ் வாங்கி பயன்படுத்தலாம்.

இவ்வாறு முகப்பரு குறித்து முக்கியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் டாக்டர் அர்ச்சனா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close