நாடாளுமன்ற அவையில் இதெல்லாம் வெத்து வேட்டு என துணிச்சலாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்.

thumb_upLike
commentComments
shareShare

நாடாளுமன்ற அவையில் இதெல்லாம் வெத்து வேட்டு என பகிரங்கமாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்.

 

நாடாளுமன்ற அவையில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த தமிழ்நாட்டின் பெண் உறுப்பினர்,யாதும் ஊரே;யாவரும் கேளிர் என்னும் தனது அறிமுக உரையை முடிக்கும் முன்னே அரங்கத்தைய கரகோஷத்தில்
அதிர வைத்த ,2019யில் தென்சென்னையின் பிரதிநிதியாக மக்கள் அவைக்குள் அடி எடுத்து வைத்த தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பற்றிய சகாப்தங்களை இந்த பதிவில் காண்போம்.

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய காலத்தில் இருந்தே அக்கட்சியின் தீவிர தொண்டனாக தன் பணியை ஆற்றியவர்.விருதுநகர் மாவட்டம் 1962 ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்து ,சுமதி என்ற பெயருடன் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே பெரியார் சிந்தனைகளையும்,திராவிட சித்தாந்தங்களையும் கற்று தேர்ந்து அதன் வழியே பயணித்து தற்போது வீரம் மிக்க தமிழச்சி தங்கபாண்டியனாக விளங்குகிறார்.

மேலும் வீட்டில் திராவிட கல்வியும்,தந்தையின் கண்காணிப்பும்,பள்ளியில் உலக கல்வியும் கற்ற தமிழச்சி ,வெறும் படிப்போடு மட்டும் தன்னை நிறுத்தி கொள்ளாமல் ,நாடகம் ,நாட்டியம்,எழுத்து,பேச்சு,இசை என பல கலைகளை கற்ற கலை மகளாக விளங்கினார்.

பிறகு வாசிப்பின் மீது பிரியம் கொண்ட தமிழச்சி ஷேஸ்பியரின் இலக்கியங்களின் மீதான அதீத ஆர்வத்தினால் மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார்.பிறகு முதுகலை கல்வியை மதுரை தியாகராஜா கல்லூரியில் முடித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அதிலும் முனைவர் பட்டத்தை பெற்றார்.பெண்ணிய சிந்தனையோடு வளர்ந்த தமிழச்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் தனது பேராசிரியர் பணியை தொடர்ந்தார்.

தன் வாழ்க்கையின் நிகழ்ந்த பெரிய சோகமாக தந்தையின் இறப்பு செய்தி தமிழச்சி செவிக்கு வரவே,தந்தையின் இடத்தை நிரப்ப தம்பி தங்கம் தென்னரசு முழுநேர அரசியலில் இறங்கினார்.தமிழச்சி தங்கபாண்டியனும் பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.இப்படியாக சென்ற தமிழச்சியின் அரசியல் பயணத்தின் திருப்பு முனையாக தீவிரமாக இறங்க,2001ஆம் ஆண்டு தலைவர் மு.கருணாநிதிக்கு நிகழ்ந்த அநியாயத்தை கண்டு கொதித்து.தனது பேனாவை ஆயுதமாக்கி கருணாநிதிக்காக அவர் எழுதிய கவிதை அந்நேரத்தில் எழுச்சிகரமாக அனைவரின் மனதிலும் பதிந்தன.இந்த காரணத்திற்காக கலைஞரே இவருக்கு கொடுத்த பெயர் தான் தமிழச்சி.

இவ்வாறு பரிணாமம் அடைந்த தமிழச்சி,கருணாநிதியின் சொல்லுக்காக மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தனது அரசு பணியையே ராஜினாமா செய்துள்ளார்.இதன் பின்னர் தான் அரசியல் ஈடுபாடும் அதிகரித்துள்ளன.ஆரம்பத்தில் பேச்சாளராக மட்டுமே இருந்த தமிழச்சி 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பங்கேற்றார்.அந்த நேரம் அவருக்கு ஏற்பட்ட விபத்தால் அந்த வாய்ப்பும் பறிபோனது.பிறகு அதில் இருந்து மீண்டு வந்த தமிழச்சி தி.மு.க மேடைகளில் தனித்துவமாக தெரிய ஆரம்பித்தார்.மீண்டும் தென்சென்னையின் அரசியலில் களமிறங்கிய தமிழச்சி 'ஐந்து லட்சத்து அறுபது நான்காயிரத்து எட்நூற்று எழுபத்து இரண்டு'பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

பிறகு மக்களவைக்குள் முதல் முறையாக நுழைந்த இவர்,சமரசம் இன்றி பல கேள்விகளை முன் வைத்து ,நாடாளுமன்றத்தில் 79% விழுக்காடுகளை வைத்திருக்கும் அவர்,மொத்தமாக 279 கேள்விகள் கேட்டு இருக்கிறார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் வைத்த பட்ஜெட்டை இதெல்லாம் வெத்து வேட்டு என பகிரங்கமாக தனது கருத்தை பதிவு செய்தார்.இவரது அஞ்சாத இந்த பேச்சும் யாருக்கு அசராத தன்மையும் அனைவரையும் அசர வைத்தது.இன்னும் பல வெற்றி முயற்சிகளை தமிழச்சி தங்கபாண்டியனிடம் எதிர்பார்ப்போம்.

Trending Articles
AvalGlitz in Social Media
Share to your pages!
Close