அடி உதைக்கு பயந்து இரண்டாவது மனைவி கதறல் : Dancer Ramesh Wife Issue | Viral Dancer Ramesh

thumb_upLike
commentComments
shareShare

சோசியல் மீடியாவில் தனது நடந் வீடியோவால் பேமஸ் ஆனவர் டான்சர் ரமேஷ். சோசியல் மீடியா புகழால் அவருக்கு ஜீ தமிழில் நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி நடன திறமையுடன் இருக்கும் ரமேஷுக்கு மைனஸ் என்று சொன்னால் அது அவரது குடிபழக்கமும், அவரது இரண்டு மனைவிகளும் தான்.

ஆம் ஜீ தமிழால் புகழ் வெளிச்சத்திற்கு வந்த ரமேஷ் தனது இரண்டாவது மனைவி, பிள்ளைகளுடன் பேட்டி கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது மூத்த மனைவி சித்ரா, தன் தம்பிகளை அழைத்து இவரை தேடி கண்டுபிடிக்க சொல்லியுள்ளார்.

ரமேஷை தேடி கண்டுபிடித்தவர்கள் மூத்த மனைவியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற அவர், முதல் மனைவியுடனே தங்கி விட்டார். வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது இரண்டாவது மனைவி இன்பவள்ளி, யாரோ சிலர் இவரை கடத்திச் சென்றுவிட்டனர் என புகார் அளித்துள்ளார்.

ஆனால் இது நடந்த சில மணி நேரங்களிலே தன் மூத்த மனைவியுடன் ஒரு வீடியோ பதிவை போட்டார் ரமேஷ். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் தன் மனைவியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.அவரின் மூத்த மனைவி சித்ராவோ, நன் அடிக்கடி வெளியூர் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டு 15, 20 நாள் கழித்து வருவேன். அப்போது என் கணவருக்கும் அவளுக்கும் பழக்கமாகி இருவரும் ஓடி விட்டனர்.

நான் அவரை தேடாத இடமில்லை, பத்து வருடங்களாகி விட்டது. அவரை சோசியல் மீடியாவில் பார்த்தேன். என் மகளுக்கு திருமணம் அதனால் இவர் வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனையும் குழந்தைகளையும் பார்த்துவிட்டு அவர் எங்களுடனே தங்கி விட்டார். தேவையில்லாமல் அவள் பொய்யான செய்தியை பரப்புகிறாள் என சித்ரா கூறியுள்ளார்.

இது இப்படியிருக்க இரண்டாவது மனைவி இன்பவள்ளி கூறும் தகவல் வேறு ஆக உள்ளது. சித்ராவிற்கு பயந்து ரமேஷ் அப்படி நடந்து கொள்வதாக கூறுகிறார். அதாவது ரமேஷ் இன்பவல்லியிடம் பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், சித்ரா என்னை மிரட்டுகிறாள். நான் நடனம் ஆடினால் அவளோடு தான் இருக்க வேண்டுமாம். உன்னிடம் வந்தால் என்னையும், குழந்தைகளையும் ஏதாவது செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாள் என ரமேஷ் கூறியதாக இன்பவள்ளி தெரிவிக்கிறார்.

அதுமட்டுமல்ல, சித்ரா இன்பவள்ளியையும், அவரின் மூன்று மகள்கையும் அடித்ததாகவும் இன்பவள்ளி கூறினார். இந்த் செய்தியை சித்ராவும் ஒப்புக்கொண்டார். சித்ரா இதுபற்றி கூறும்போது, ஆம் அவள் என் கணவரை அவள் கணவர் என்று பேட்டி கொடுத்ததால் கோவத்தில் இரண்டு அடி அடித்தேன். சரி அவளிடம் ரமேஷ் தந்துவிடுகிறேன். ஆனால் இவர்களுக்கு கல்யாணம் ஆன சான்றிதழ், இவரின் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றார். இவற்றை காண்பித்தால் ரமேஷை திருப்பி அனுப்புவதாக கூறினார் சித்ரா.

இன்பவள்ளி பேசும்போது, நான் கல்யாணம் ஆனதில் இருந்து கஷ்டப்படுகிறேன். என் மகள்களும் நானும் வேலைக்கு போகிறோம், அவர் எந்த வேலைக்கும் செல்ல மாட்டார். எங்களுக்கு எதுவும் வேண்டாம், அவர் நடனமாடி சம்பாதிக்கும் பணத்தை சித்ராவுக்கே கொடுக்கட்டும். எங்களுக்கு ரமேஷ் மட்டும் போதும் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இந்த மீடியா தான் அவரை பேமஸ் ஆக்கியது, இந்த மீடியா தான் அவரை பெற்றுத் தரவேண்டும் எனவும், முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் எனவும் இன்பவள்ளி கேட்டுக்கொண்டார்.   

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close