Rachitha இப்படி தான் இருக்கணும்னு நினைச்சாங்க | Costume Designers Radha & Saranya | Bigg Boss 6

thumb_upLike
commentComments
shareShare

பிக்பாஸ் சீசன் 6  ரொம்ப விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு வெளியில் ரசிகர் பட்டாளம் உருவாகுவது நாம் பார்த்திருப்ம். இந்த நிகழ்ச்சியில் இருக்கும் அத்தனை கண்டெஸ்டன்ட்களுக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. எந்த அளவுக்கு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் பிரபலம் ஆகிறார்களோ, அதே அளவு அவர்கள் அணியும் உடைகளும் பேசு பொருளாகும். அதிலும் சனி, ஞாயிறு கிழமைகளில் கேட்கவே வேண்டாம். அப்படி அவர்கள் வீக் என்ட் எபிசோடில் போடும் ஆடைகளை வடிவமைக்கும் டிசைனர்கள் ராதா, சரண்யா உடன் ஒரு நேர்காணல்.

பிக்பாஸ் பிரபலங்களுக்கு ஆடைகள்

null

நாங்கள் பிக்பாஸ் வீட்டில் ரட்சிதா, கதிர், குயின்சி, ஜனனி ஆகியோருக்கு ஆடை வடிவமைக்கின்றோம். குயின்சி எங்களிடம் நேரடியாகவே பேசி விட்டார், மற்றவர்கள் மேனேஜர், அசிஸ்டென்ட் எங்களிடம் பேசி நாங்கள் அவர்களுக்கு ஆடை வடிவமைக்கின்றோம்.

ரட்சிதா மகாலட்சுமி

null

ரட்சிதா தெளிவாக சொல்லிவிட்டார், மாடர்ன் டிரஸ் வேண்டாம் நான் TRADITIONAL ஆக செல்லலாம் என்று. ரத்சிதாவுக்கு நாங்கள் இன்ஸ்டன்ட் புடவைகள் தான் கொடுக்கிறோம். அவரின் குணத்திற்கு ஏற்ப போல்டான உடைகள் தான் ரத்சிதாவுக்கு தயார் செய்கிறோம்.

குயின்சி

null

குயின்சி நேரடியாகவே பேசினார். எந்த ஆடை வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் அசிங்கமாக இல்லாமல் நீட்டாக இருக்க வேண்டும் என்று மட்டும் சொன்னார். அதுமட்டுமல்லாமல் நிறைய கவுன்ஸ் தான் அவர் கேட்டார்.

ஜனனி

null

ஜனனியும் அப்படி தான் நீட்டான உடைகள் வேண்டும், EXPOSE செய்யும் உடைகள் வேண்டாம் என கூறிவிட்டார். அவ்வளவு தான் மற்றபடி எங்களுக்கு பிடித்த மாதிரி தான் நாங்கள் அவர்களுக்கு வடிவமைக்கிறோம்.

எங்க பொட்டிக்

null

நாங்கள் நான்கு வருடங்களாக இந்த பொட்டிக் நடத்துகிறோம். எங்கள் பொட்டிக்கின் பெயர் யாரா. அதாவது சரன்யாவில் உள்ள கடைசி எழுத்து ராதாவில் உள்ள முதல் எழுத்தும் தான் எங்கள் பிராண்டின் பெயர். நாங்கள் இருவரும் பேஷன் டிசைனிங் ஒன்றாக படித்தோம். அப்போதிலிருந்து நண்பர்கள் தான்.

ஸ்டார்ட்- அப்

null

முதலில் ஒரு பொட்டிக் வைக்க வேண்டும் என்று எண்ணம் வந்தபோது பெற்றோர் அவர்களால் முடிந்த அளவு பணம் கொடுத்தனர். இந்த பொட்டிக் ஆரம்பித்த போது ஒரு வருடத்திற்கு மேல் நாங்கள் கஷ்டப்பட்டோம், அதிலும் லாக் டவுன் இன்னும் கஷ்டத்தை கொடுத்தது. ஆனால் அந்த கஷ்டத்தை தாண்டி இன்று சாதித்துள்ளோம்.

எங்கள் ஸ்பெஷாலிட்டி

null

எங்கள் கவுன்ஸ் தான் எங்களின் ஸ்பெஷாலிட்டி. எங்களிடம் வரும் கஸ்டமர்கள் வாய் வழியாக சொல்லி தான் எங்களுக்கு நிறைய கஸ்டமர்கள் வர ஆரம்பித்தனர். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசம்.

சீரியல் ஹீரோயின்ஸ்

null

டாப் சீரியல் நடிகைகளுக்கு நாங்கள் டிசைன் செய்கிறோம். ப்ரீத்தி ஷர்மா, பவித்ரா ஜனனி, ஸ்வாதி கொண்டே என பல முன்னணி சீரியல் நடிகைகளுக்கு நாங்கள் வடிவமைக்கின்றோம்.

செலிபிரிட்டி கொலாப்

CELEBRITY COLLAB என்பது நிச்சயம் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அதன்மூலம் எங்களுக்கு பல கஸ்டமர்கள் கிடைக்கிறார்கள். ஆனால் சில சமயம் ஆடைகள் வாங்கிவிட்டு, சில நடிகைகள் எங்களை மென்ஷன் செய்ய மாட்டார்கள் அதையும் பார்த்துள்ளோம். ஆனால் நல்லவர்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம்.

தொப்பை இருந்தால் எப்படி டிரஸ் பண்ணுவது

null

தொப்பை இருக்கும் பெண்கள் பிட்டாக இல்லாமல், லூசான ஆடைகள் அணிவது பெஸ்ட். அந்த மாதிரி உடைகள் தொப்பை இருப்பதை வெளியில் காட்டாது.

உயரம் குறைவான பெண்களுக்கு டிப்ஸ்

null

உயரம் குறைவான பெண்கள், கால் வரை முழுதாக உள்ள ஆடைகள் அணிவதை தடுக்க வேண்டும். KNEE LENGTH அல்லது CALF LENGTH கவுன்ஸ் சிறந்தது. அப்படி உடைகள் அணிந்து ஹீல்ஸ் போட்டால் உயரமாக தெரிவார்கள்.

உயரம் அதிகமான பெண்களுக்கு டிப்ஸ்

null

உயரமான பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் அழகாக இருக்கும். அது தான் உண்மை.

நிறம் குறைவான பெண்கள்

நிறம் குறைவான பெண்கள், PASTEL COLORS அணிவது பெஸ்ட். அவர்களுக்கு அது அழகாக இருக்கும். டார்க்கான கலர் உடை அணிந்தால் அது அவர்களை டல்லாக காட்டும்.

இவ்வாறு யாரா டிசைனர்ஸ் சரண்யா மற்றும் ராதா பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close