பெண்களுக்கு சுய சம்பாத்தியம் எவ்வளவு முக்கியம்? | Deep Skin Dialogues| Singer Chinmayi Interview

thumb_upLike
commentComments
shareShare

2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடலை பாடி திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.

null

சின்மயி பாடகி, டப்பிங் கலைஞர் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு பிசினஸ் பெண்ணாகவும் வலம் வருகிறார். ப்ளூ எலிபெண்ட் என்ற மொழி பெயர்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்மயி, டீப் ஸ்கின் டையலாக்ஸ் என்ற தோல் மருத்துவ மையத்தையும் தொடங்கி இருக்கிறார். இது குறித்து சின்மயி நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சுய சம்பாத்தியம் அவசியம்

null

அவர் கூறும்போது, பெண்களுக்கு சுய சம்பாத்தியம் என்பது மிக அவசியமானது. நான் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் உள்ளேன். ஆனால் அதுவே வாழ்க்கை முழுக்க எனக்கு உதவுமா என்று கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்வேன். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் இருந்தாலும், இதுவே நிதர்சனம்.

அதனால் தான் எனக்கு ஆர்வம் உள்ள துறைகளை தேர்ந்தெடுத்து அதில் பிசினஸ் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்தேன். அப்படி தான் ப்ளூ எலிபண்ட் என்ற மொழி பெயர்ப்பு நிறுவனத்தை தொடங்கினேன். அதன் மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மொழி பெயர்ப்பதில் உதவி வருகிறோம். அதேபோல் எனக்கு சரும பராமரிப்பில் ஆர்வம் அதிகம், அதனால் இந்த தோல் மருத்துவமனையை தொடங்கி உள்ளேன். ஆனால் நான் மருத்துவர் இல்லை. குமுதினி சுப்பிரமண்யம் என்னும் சிறந்த தோல் மருத்துவர் தான் இங்கு எல்லாம்.

நான் உங்களிடம் சொல்வது எல்லாம் ஓன்று தான் உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ, அதில் கவனம் செலுத்தி மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

டீப் ஸ்கின் டையலாக்ஸ்

null

சருமம் மிக முக்கியமான ஓன்று அதை ஆண், பெண் இருவரும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் சரியாக பார்த்துக் கொள்வதில்லை. இதனால் சருமத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இங்கு நம்முடைய டீப் ஸ்கின் டையலாக்ஸ் மருத்துவமனையில் தோல், தலைமுடி, மற்றும் நகம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

டீப் ஸ்கின் டயலாக்ஸ் என்பது இந்தியாவில் உள்ள ஒரே மெடி-ஸ்பா ஆகும், இது உலகின் பாதுகாப்பான FDA அங்கீகரித்த லேசர் ஹேர் ரிமூவலை குறிப்பாக இந்திய சருமத்திற்காக மெலனின் ரீடருக்கு வழங்குகிறது.

இது தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஆக்கிரமிப்பு இல்லாத ஹாலிவுட் சிற்ப சிகிச்சையை வழங்குகிறது, இது சிகிச்சை பகுதிகளில் உள்ள 24% கொழுப்பு செல்களை நிரந்தரமாக அழிக்கிறது. அழிக்கப்பட்ட கொழுப்பு செல்கள் நிணநீர் மண்டலத்தால் வெளியேற்றப்படுகின்றன.

 

null

மெடி-ஸ்பா உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும் உலகத்தரம் வாய்ந்த மெடி ஃபேஷியல்களையும் வழங்குகிறது. தீக்காயம், முகப்பரு மற்றும் கெலாய்டு தழும்புகள், விட்டிலிகோ, மெலஸ்மா மற்றும் அலோபீசியா அரேட்டா போன்ற முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளுக்கு குழு ஏற்கனவே வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.

தங்கப் பதக்கம் வென்றவரும் ஹண்டா விருது பெற்றவருமான குடியுரிமை தலைமை தோல் மருத்துவர் டாக்டர் குமுதினி சுப்ரமணியன் இங்கு முதன்மை மருத்துவராக உள்ளார்.

நீங்கள் தினமும் செய்யும் தவறு

null

டாக்டர் குமுதினி நம்முடன் பேசும்போது, சருமம் எந்த அளவு முக்கியமானது என விவரித்தார். அவர் கூறும்போது, சருமத்தை ஆண், பெண் இருவரும் பாதுக்காக வேண்டும். இந்த காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளையும் செய்து, வெளியில் வேலைக்கும் சென்று வருகிறார்கள். அதனால் வழக்கத்தை விட அதிகமான மன அழுத்தம் இருக்கும். அதனால் நம் சருமம் தான் முதலில் பாதிக்கப்படும்.

இன்று பல தோல் மருத்துவமனைகள் உள்ளன. அதனால் நீங்கள் உங்கள் சருமத்தை யாரிடம் ஒப்படைக்கிறீர்கள் என்பதில் தான் அனைத்தும் உள்ளது. சரியான மருத்துவரிடம் சென்று உங்கள் சரும பிரச்சனைகளை தீர்த்து கொள்ளுங்கள் என கூறியவர் நாம் தினமும் செய்யும் ஒரு அதிர்ச்சியான தகவலையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அதாவது தலையணை உரையினால் கூட சருமம் பாதிப்படையும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போதெல்லாம் உங்கள் தலையணை உரையை மாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதுமட்டுமல்ல தலையில் அதிக நேரம் எண்ணெய் இருக்க கூடாது. தலைக்கு குளிக்கும் போது 20 நிமிடம் எண்ணெய் தேய்த்து குளித்தால் போதும் என்கிறார் டாக்டர் குமுதினி சுப்பிரமண்யம்.

null

இறுதியாக சின்மயி நம்மிடம் பேசும்போது கூறிய ஒரு விஷயம், பெண்கள் என்றால் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற காலம் மாறி விட்டது. சுய சம்பாத்தியம் ஒன்றை உருவாக்கி கம்பீரமாக வாழுங்கள் என கூறினார் சின்மயி.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close