கர்ப்பிணி பெண்களுக்கு நான் சொல்ற Advice இதுதான் | Chandramukhi's Bommi - Praharshita Interview

thumb_upLike
commentComments
shareShare

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவாலும் ரசிகர்களாலும் மறக்க முடியாத படமாக இது இருந்தது. இந்தப்படத்தில் நடித்த அனைவருக்குமே தனி ரசிகர் பட்டாளமே உண்டு, அதிலும் அந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக் நடித்த பொம்மியை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா ?

பிரகர்ஷிதா என்ற பெயருடைய அவர் வேலன், ராஜராஜேஸ்வரி, போன்ற டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சில வருடங்களுக்கு முன்பு ஆகாஷ் முரளி என்பவரை திருமணம் செய்த அவர் இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அனைவரின் பேவரைட்டான போம்மியுடன் ஒரு நேர்காணல்.

வக்கீல் ஆக வேண்டும் என நினைத்தேன்

null

நான் விஸ்காம் படிக்காமல் இருந்திருந்தால் வக்கீலுக்கு படித்திருப்பேன். அவர்களுக்கு தான் நியாயத்தை தட்டி கேட்கும் குரல் உள்ளது. எனக்கு ஒரு விஷயம் தவறாக பட்டால் நான் அதை தட்டி கேட்பேன். ஒருவேளை சினிமாவில் வக்கீலாக நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

இயக்குனராக நான்

null

இயக்குனர் ஆக வேண்டும் என்பத என் விருப்பம், ஒருவேளை நான் இயக்குனர் ஆனால் பிரசவத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் மனசோர்வு குறித்து படம் இயக்குவேன். நாம் அதிகம் பேசாத விஷயம் இது. ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்திற்கு பிறகு டிப்ரசனை அனுபவிக்கிறாள். நான் அனுபவித்தேன், அதிலிருந்து வெளிவர நான் தெரபிஸ்ட் இடம் சென்று வந்தேன். அதனால் அது குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என் கர்ப்பகாலத்தில் நானாக கற்றுக் கொண்ட விஷயம்

null

இந்த உலகத்தில் உள்ள பல பெண்கள் ஒரு குழந்தையை பிரசவிக்கிறார்கள். ஆனால் அந்த கர்ப்ப காலம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனக்கு தெரிந்த பெண்களிடம் இதுபற்றி கேட்டபோது அவர்களுக்கு அதுகுறித்து எதுவும் நியாபகம் இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய இழப்பு

null

எனக்கு இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டது, என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைவரும் பராவாயில்லை என கூறினார்கள் ஆனால் அதுவும் ஓர் உயிர் தானே. என்னை நானே தவறு என எண்ண ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் அது மிகப்பெரிய இழப்பு.

கர்ப்ப காலம்

null

என்னுடைய கர்ப்ப காலத்தில் நிறைய விஷயங்களை நானே கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு விஷயமும் புதிதாக இருந்தது. ஐந்து மாதங்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். கிளாசஸ் போக ஆரம்பித்தே, அது புதிதாக நன்றாக இருந்தது. என் குழந்தைக்கு கொடி சுத்தி இருந்தது, அதனால் சிசேரியன் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு அது விருப்பம் இல்லை, என் தோழி வேறு ஒரு மருத்துவரை சந்தித்து நிலைமையை கூறினாள், எனக்கு நார்மல் டெலிவெரி தான் ஆனது. அதனால் வழி இல்லை இது தான் செய்ய வேண்டும் என சொன்னால் நம்பாதீர்கள், வேறு நல்ல மருத்துவரை பாருங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு டிப்ஸ்

null

டிப்ஸ் சொல்வதற்கு அவ்வளவு உள்ளது. ஆனால் நிரியி விஷயங்கள் நாமாக கற்றுக் கொள்வோம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தையுடன் பேசுங்கள், கெட்ட விஷயங்களை கேட்காதீர்கள், பேசாதீர்கள்.

கவலை வேண்டாம்

null

கர்ப்ப காலத்தில் வெயிட் போடும், நம்மை நாம் பாத்தக் கொள்ள நேரம் கிடைக்காது, நான் குண்டாக இருப்பதாக ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் அது தவறு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உடல் அமைப்பு உண்டு, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கவலை கொள்ளாதீர்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் அது போதும்.

நயன்தாரா மற்றும் ஜோதிகா

null

நயன்தாரா மேம் ரொம்ப போல்ட், அவருடைய ஸ்கிரிப்ட் செலெக்ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய ஸ்டைல் எல்லாமே சூப்பர்.

ஜோதிகா மேம் அவருடைய வாழ்க்கையை வாழும் விதம் எனக்கு பிடித்துள்ளது. கல்யாணம் செய்து, சினிமாவில் இருந்து ஒய்வு எடுத்து வீட்டை பார்த்து அதன்பின் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கிறார். அவர் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

முருகன் தான் எனக்கு எல்லாம்

null

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, முருகன் என்னுடைய இஷ்ட தெய்வம். என் வாழ்க்கையில் முருகன் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். சந்திரமுகி ஆகட்டும், என் வாழ்க்கை, என் குழந்தை அனைத்தும் முருகன் தந்தது தான். குன்றத்தூர் எனக்கு பிடித்த முருகன் கோவில், எனக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் நான் அங்கு தான் சென்று பிரார்த்தனை செய்வேன்.

பெண்களுக்கு டிப்ஸ்

null

பெண்கள் எப்போதும் தைரியமாக போல்டாக இருக்க வேண்டும். தவறு என்றால் தைரியமாக பேசுங்கள் அது தவறு இல்லை. வாழ்க்கையில் என்ன நடந்தால் அதுவும் கடந்து போகும். நீங்கள் எப்போதும் சந்தோசமாக தைரியமாக இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close