தொற்றுநோயால் ஏற்படும் புண்கள்!பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை.

thumb_upLike
commentComments
shareShare

தொற்றுநோயால் ஏற்படும் புண்கள்!பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டியவை.

 

குழந்தையை ஈன்ற தாய்மார்களுக்கு சிறிது நாட்கள் முலைகாம்புகள் மிருதுவாக இருக்கும்.இது இயல்பான ஒன்றாகும்.ஆனால் இந்த மிருது தன்மை பாலூட்ட ஆரம்பித்த சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.அந்த தன்மை குறைவதை ஒரு வாரத்திலேயே உணர்வார்கள்.

பாலூட்டும் நேரத்தில் தொடர்ச்சியான வலி இருப்பது சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டிய விஷயம் அல்ல.அதை சரியான ஆலோசகரிடம் அணுகுவது நல்லது.

குழந்தையை சரியான முறையில் அணைத்து பாலூட்டாத காரணத்தினால் ஏற்படும் முலைக்காம்பு புண்கள் குழந்தை மற்றும் தாய் இருவரையும் பாதிக்கும்.எனவே முடிந்த அளவுக்கு குழந்தையின் வாய் வயிறு மற்றும் தொடை போன்ற உடல் பாகங்களை உங்கள் மார்பகத்தோடு பக்குவமாக அணைத்து பாலூட்ட வேண்டும்.

அவனது கழுத்தையும் தோள்களையும் உங்கள் கையால் தாங்கிப் பிடித்துக்கொண்டு, மெதுவாக உங்கள் மார்புப் பக்கமாக அவனை அசைக்கவும். உங்கள் குழந்தை முலைக்காம்பைத் தேடி , அதை அடைந்து உங்கள் மார்பை அரவணைத்துக்கொள்ளட்டும்.உங்கள் குழந்தை உங்கள் மார்புடன் அரவணைக்கப்படும்போது நீங்கல் இன்னும் வலியை உணர்ந்தால், உங்கள் விரலால் குழந்தையின் நாடியை அழுத்தவும்.தாய்ப்பாலூட்டிய பின்னர் உங்கள் மார்பில் வெப்பமான துவாய்களை வைத்துவிடவும். இது முலைக்காம்பை படிப்படியாக குளிரச் செய்யும்.

உங்கள் குழந்தை சரியான முறையில் தூக்கிவைக்கப்பட்டு அரவணைக்கப்பட்டிருப்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த வலி மாறாவிட்டால் உங்கள் மருந்துவரிடம் மேலுமான உதவியைக் கேட்கவும்.

மேலும் முலைக்காம்பு புண்கள் சரியாகவிட்டால் அந்த பகுதியில் ஏதோ தொற்றுநோய் உள்ளது என்பது அர்த்தமாகும்.

இதே நிலையில் குழந்தைக்கு பாலூட்டினால் அது குழந்தையும் பாதிக்கும்.எனவே புண் சரியாகும் வரை குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்ப்பது நல்லது.

Trending Articles
AvalGlitz in Social Media
Share to your pages!
Close