கேட் மிடில்டன் ஜனவரி 9, 1982 ஆம் ஆண்டு ரீடிங்கில் மேல் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.இவர் வில்லியமின் மனைவி ஆவார்.இவரது திருமணம் 2011 ஏப்ரல் 29 வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது.கேட் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்பிற்கு சென்றபோது 2001ஆம் ஆண்டு வில்லியமை சந்தித்தார்.ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தங்களை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாக புகார் எழுப்பினர்.
இருவரும் மனம் ஒத்த பேசி நண்பர்களாக பிரிந்தனர்.2007 ஆம் ஆண்டில் மீண்டும் இருவரும் காதலால் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்தார்.அவருடைய புது விதமான அழகியல் உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல"சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்"என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இளவரசி கேட் மிடில்டன்க்கு சமீபத்தில் புற்றுநோய் உள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில்,
உங்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன்.குறிப்பாக அறுவை சிகிச்சையில் இருந்து நான் மீண்டு வரும் இந்த தருணத்தில்,உங்களுடைய அன்பு ஆதரவு மற்றும் வலைதள செய்தி எல்லாமே எனக்கு தைரியத்தை கொடுத்தது.நான் நோய் பட்ட நிலையில் இருக்கும்போது எங்களின் மொத்த குடும்பத்திற்கும் இரண்டு மாதங்கள் மிகவும் கடுமையாக இருந்தது.ஆனால் ,
என்னுடன் இருந்த மருத்துவ குழு என்னை நன்றாக பார்த்து கொண்டது.நான் அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.ஜனவரி மாதம் எனக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அப்போது இது புற்றுநோயாக இருக்காது என்று நினைத்தேன்.அறுவை சிகிச்சை சரியாக முறையாக நடந்து முடிந்தது.
அனால் அதற்கு பிறகு எடுத்த சோதனையில் எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது.ஆனால் எனது மருத்துவர் குழு என்னை கீமோதெராபி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியது.இப்போது நான் அந்த சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன்.எனக்கும் என் குடும்பத்திற்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.இருந்தாலும் குடும்ப நலன் கருதி இதை பொறுமையா கையாண்டோம்.நான் இதில் இருந்து குணமடைந்து வர சிறிது காலம் எடுக்கும்.நான் என்னை தேற்றி கொண்டேன்.என் கணவர் குழந்தைகளுக்கு நான் குணமடைவேன் என புரிய வைக்க நேரம் எடுத்து கொண்டேன்.
நான் நம்புகிறேன்.உடலளவில் மனதளவில் என்னை தேற்றும் விஷயங்களில் ஈடுபட்டுள்ளேன்.என் கணவர் வில்லியம் என்னுடைய பக்கத்தில் இருப்பது எனக்கு பெரிய ஆறுதல்.உங்களில் பலர் காட்டிய அன்பு ஆதரவும் எனக்கு அது போன்றதே.இனி சிறிது காலத்திற்கு நான் சிகிச்சையில் இருப்பதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் தனிமை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
என்னுடைய வேலை எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை தந்துள்ளது.நான் குணமடைந்து அதை தொடர விரும்புகிறேன்.என்னை போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி நான் சிந்தித்து பார்க்கிறேன்.நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புவது தன்னம்பிகையயை இழக்காதீர்கள்.நீங்கள் தனியாக இல்லை.நம்பிக்கையோடு முன் செல்லுங்கள்.என கூறியுள்ளார்.