என் Business-ல பெண்கள் தான் Target..ஏன்? : Boutique On Wheel Karthik Exclusive Interview

thumb_upLike
commentComments
shareShare

நம் அனைவருக்கும் ஆடைகள் வாங்குவது என்பது விருப்பமான விஷயம், அதிலும் பெண்களுக்கு கேக்கவே வேண்டாம். இப்போது ஆன்லைன் ஷாப்பிங் வந்துவிட்டதால் நமக்கு பிடித்த ஆடை எந்த மாநிலத்தில் தயாரானாலும் நாம் வாங்கும் நிலை வந்துவிட்டது. கடைக்கே செல்லாமல் வீட்டில் உட்காந்து வாங்கி விடலாம்.

ஆனால் இதை இன்னும் ஒரு படி மேலாக நம் ஷாப்பிங்கை எளிதாக்க நம் வீடு தேடி கடை வந்தால் எப்படி இருக்கும். இந்த யோசனைக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்திக். BOUTIQUE ON WHEEL என்னும் ஸ்டார்ட்-அப்-பை இவர் தொடங்கியுள்ளார். அதாவது நாம் விரும்பி அணியும் உடைகளை பேருந்தில் வைத்து நம் வீட்டுக்கே கொண்டு வருகின்றனர். கடையாக ஒரு இடத்தில் இல்லாமல் நகரம் முழுவதும் இந்த BOUTIQUE வலம் வந்து கொண்டே இருக்கும்.

இந்த BOUTIQUE உரிமையாளர் கார்த்திக் உடன் ஒரு நேர்காணல்.

எப்படி இந்த புது ஐடியா கிடைத்தது ?

null

மூன்று வருடங்களாக நாங்கள் இதை நடத்தி வருகிறோம், வாட்ஸ் அப், பேஸ்புக் மூலமாக இதை செய்து வந்தோம். SWIGGY, OLA  மாதிரி ஒரு ஸ்டார்ட்-அப் –பாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். கஸ்டமர் வீட்டுக்கே சென்று கொடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்தோம், அதன் விளைவு தான் இது.

உங்களின் பிசினஸ் எப்படி போகிறது ?

இப்போது அப்பாய்ன்மென்ட் எடுத்துக் கொண்டு தான் செல்கிறோம், பங்களாவாக இருக்கட்டும், அப்பார்ட்மெண்ட்டாக இருக்கட்டும் முதலில் போன் செய்து சொல்லிவிடுவார்கள், அதன்பின் நாங்கள் செல்வோம்.

அப்பார்ட்மெண்ட், பங்களா போன்ற இடங்களுக்கு செல்லும்போது அவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் ?

ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தது, பஸ் என்றவுடன் யாரும் நபிக்கையாக ஏற மாட்டார்கள், முதலில் கஸ்டமர்கள் வருவதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இப்போது அவர்கள் அழைத்தால் நாங்கள் செல்வோம்.

வேறு என்ன பிரச்சனைகள் இருந்தது ?

இங்கு பஸ் உள்ளேயே ட்ரையல் ரூம் உள்ளது, சிலர் ட்ரையல் பார்க்க கூச்சப்படுவார்கள். இப்போது நாங்கள் ஒரு நல்ல கம்பெனி என்ற நம்பிக்கை கொடுக்கவும் அவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். அவர்கள் பார்த்தாலே தெரியும் துணியால் தான் செய்துள்ளோம் அங்கு எந்த கேமராவும் இல்லை. அவர்கள் ட்ரையல் பார்க்க வேண்டும் என்றால் அவர்களின் குடும்பத்தார் உடன் இருப்பார், நாங்கள் CASH COUNTER பக்கம் வந்து விடுவோம்.

நீங்கள் TREND SETTER-ரா இல்லை TREND FOLLOWER-ரா ?

கண்டிப்பாக TRENDSETTER தான். ஒரு பஸ் இருப்பதினால் இந்த பிசினஸ் செய்து விட முடியாது, எங்களிடம் காஸ்ட்யும் டிசைனர்கள் உள்ளனர். ஒரு டிசைன் அவர்களுக்கு பிடித்தால் தான் அது விற்பனைக்கு வைப்போம். இது அனைத்தும் நல்ல தரமாக செய்கிறோம்.

ஏன் லேடிஸ் கார்மன்ட்

பெண்கள் தான் எங்கள் டார்கெட். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் ஒரு சட்டையே எடுப்பார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. ஷாப்பிங் செய்து கொண்டே இருப்பார்கள். அதிக அளவில் விற்பனை பெண்களால் தான். அதனால் தான் பெண்களுக்கான ஆடை பிசினஸ்.

எந்த வயதுடையவர்கள் அதிகமாக வருகிறார்கள்?

20 வயதிலிருந்தே பெண்கள் வருகிறார்கள். எங்களிடம் 16 வயதிலிருந்து 60 வயது வரை பெண்களுக்கான ஆடைகள் உண்டு. 35 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்கள் தான் அதிகம். அதேபோல் இளம்பெண்களை லீவு நாட்களில் கவர் செய்து விடுவோம்.

நிறைய ஆடைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் செல்கிறவர்களை எப்படி சமாளிப்பீர்கள் ?

இங்கு நிறைய விதமான ஆடைகள் உள்ளது, அனைவரும் ஏதாவது ஒன்று வாங்கிவிட்டு தான் செல்வார்கள், சிலர் பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் செல்வர். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். எங்களின் பிராண்டை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அதுவே எங்கள் நோக்கம்.

பெண்கள் ஆடைகள் குறித்து நிறைய கேள்விகள் கேட்பார்கள், அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் ?

இஷ்டப்பட்டு தான் இந்த பிசினஸிற்கு வந்தோம். அது ஜாலியாக தான் இருக்கும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது எல்லாம்.

எந்த ஒரு பிசினஸாக இருந்தாலும் லாபம் தரும் என்றும் சொல்ல முடியாது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் ?

லாபம் என்பதை கொண்டு இதை ஆரம்பிக்கவில்லை. எங்களின் பிராண்ட் முதலில் மக்களிடம் சேர வேண்டும். அதிக மார்ஜினை நாங்கள் கொள்ளவில்லை. ஆனால் எங்களுக்கு இதிலிருந்து லாபம் கிடைக்கவே செய்கிறது.

இவ்வாறு தன்னுடைய ஸ்டார்ட்அப் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் கார்த்திக்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close