நடிகை மீனா என்ன பாத்து Shock ஆகிட்டாங்க ? : Annie Exclusive Interview About Avvai Shanmughi Secrets

thumb_upLike
commentComments
shareShare

1996 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் கமல் மீனாவின் மகளாக நடித்த குழந்தையை யாரும் மறந்திருக்க முடியாது, அவர் இப்போது தொழிலதிபராக இருக்கிறார். அவர் உடன் ஒரு நேர்காணல்.

குழந்தை நட்சத்திரம்

null

நான் மூன்று வயதிலிருந்து விளம்பர படங்கள், சினிமா இவற்றில் நடித்து வருகிறேன். நான் சினிமா பார்க்க மாட்டேன் அதனால் எனக்கு எந்த நடிகரையும் தெரியாது. ரஜினி மட்டும் தான் தெரியும். அந்த சமயத்தில் எனக்கு அவ்வை சண்முகி வாய்ப்பு கிடைத்தது. தமிழ் தெரியாது, எனக்கு டப்பிங் கூட தீபிகா தான் பேசினார். 13 வயது வரை நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன்.

26 வருடங்களுக்கு பிறகு மீனாவுடன் சந்திப்பு

null

கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன்பு தான் நான் மீனாவை சந்தித்தேன், அவர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. அதை நான் தான் வழங்கினேன், அப்போது மீனா என்னை பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டார். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அவ்வை சண்முகி அனுபவங்கள்

null

அவ்வை சண்முகி நடிக்கும்போது எனக்கு யாரையும் தெரியாது. அந்த படத்தில் கமல் சார், மீனா மேம், ஜெமினி கணேசன் சார், நாசர் சார் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாததால் நான் நானாக அங்கு இருந்தேன். அந்தப்படத்தில் தீக்காயம் ஏற்படும் காட்சி இருந்தது, அப்போது நீச்சல் குளத்தில் போடுவார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்றபடி அவ்வை சண்முகி ஒரு நல்ல அனுபவம்.

கமல் உடன் நடித்த அனுபவம்

null

நான் செட்டில் இருக்கும்போது அமைதியாக என்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிப்பேன். அப்போது கமல் சார் ஒரு நடிகர் என்பதை தாண்டி கேமரா எப்படி இருக்க வேண்டும், வசனம் எப்படி உள்ளது என முழு பொறுப்பை தன் மீது எடுத்துக் கொண்டு செயல்படுவார். அது நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயம்.

அக்சரா என் தோழி

null

ஸ்ருதிஹாசனும், அக்சரா ஹாசனும் அவ்வை சண்முகி செட்டிற்கு வருவார்கள். அதன் மூலம் எனக்கு அக்சரா தோழி ஆகவில்லை, நானும் அக்சராவும் ஒரே டான்ஸ் கிளாஸ் சென்றோம். அதன்மூலம் நாங்கள் தோழிகள் ஆனோம். இன்றும் அக்சரா சென்னை வந்தால் என்னை வந்து சந்திப்பார்.

விருதுகள்

null

அவ்வை சண்முகி நடிக்கும்போது என்னையே டப்பிங் பேச சொன்னார்கள், அப்போது தான் தேசிய விருது கிடைக்கும் என்று. ஆனால் எனக்கு தமிழ் தெரியாத காரணத்தால் நான் பேசவில்லை. ஆனால் தமிழ்நாடு மாநில் விருது எனக்கு கிடைத்தது. அவ்வை சண்முகி குழுவிற்கு இரண்டு விருதுகள் தான் கிடைத்தது. ஒன்று குழந்தை நட்சத்திரமாக நடித்த எனக்கு, மற்றொன்று மேக்கப் கலைஞருக்கு. எனக்கு அது கிடைத்ததே பெரிதாக இருந்தது.

பிலிம்பேர், தினத்தந்தி விருது உள்ளிட்ட எட்டு விருதுகள் அந்த ஒரு படத்திற்காக எனக்கு கிடைத்தது.

கதாநாயகி வாய்பை நிராகரித்தேன்

null

எனக்கு 13 வயதிலேயே கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கும் சரி, என் பெற்றோருக்கும் சரி அதில் ஆர்வம் இல்லை, அதனால் வேண்டாம் என கூறி விட்டோம். நிறைய வாய்ப்புகள் வந்தது, சிலர் கூறுவர், தமன்னாவும் உங்களை போல் சீக்கிரமாக தான் திரைப்பயணத்தை துவங்கினார் என்பர். மீனா, சமந்தா இருவரும் பாதி மலையாளி, பாதி தெலுங்கு நீங்களும் அப்படி தான் ஒத்துக் கொள்ளுங்கள் என்றனர் ஆனால் எனக்கு விருப்பமில்லை.

சினிமா வேண்டாம் என கூறியதற்கு காரணம்

null

குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கும், கதாநாயகியாக நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நம்மை நடத்தும் விதமே வேறு மாதிரியாக இருக்கும். அதைத்தாண்டி அப்போது கதாநாயகிகளுக்கு பெரிதாக நல்ல கதாப்பாத்திரங்கள் இல்லை. மற்றொரு விஷயம் காலையில் சீக்கிரம் சென்று இரவு லேட்டாக வந்து, மீண்டும் காலை சீக்கிரமாக வர வேண்டும். இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என தோன்றியது. இவை அனைத்தையும் மனதில் வைத்து தான் சினிமா வேண்டாம் என முடிவெடுத்தேன்.

மாடலிங்

null

நான் என்னுடைய இன்ஸ்டாவில் மாடலிங் புகைப்படங்கள் பதிவிடுவது உண்டு, அது என் நண்பர்களுக்காக. என் நண்பர்கள் போட்டோகிராபராக, மேக்கப் ஆர்டிஸ்டாக உள்ளனர், அவர்கள் திறமையை காட்ட நான் அவர்களுக்கு உதவுகிறேன். அவ்வளவுதானே தவிர நடிக்கும் ஆசையில் நான் இல்லை.

தொழில் முனைவர்

null

நான் இப்போது தொழில் முனைவராக உள்ளேன். வேஸ்டட் இந்தியா என்னும் அமைப்பை நடத்தி வருகிறேன்.

விளம்பர ஏஜென்சிகள், ஈவண்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் பல அரசுத் துறைகளுடன் 8 வருடமாக மார்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்தேன்.

காவல்துறையோடு பணிபுரிந்த போது தான் நான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். தினந்தோறும் நாம் கொட்டும் கழிவுகள் எங்கு செல்கிறது என ஆராய்சி செய்ய ஆரம்பித்தேன். நாம் குப்பைகளை சில கடைகளில் தருவோம், ஆனால் அதில் பாதியை மட்டும் தான் அவர்கள் விற்பார்கள், மீதி குப்பைக்கு தான் செல்லும். அவை எங்கு செல்கிறது. அதனால் பூமிக்கு எவளவு பாதிப்பு என்பதை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்தாத பொருட்கள் நிறைய இருக்கும். துணியோ அல்லது எந்த பொருட்களாக இருந்தாலும் எங்களிடம் கொண்டு வந்து தரலாம். சில துணிகளை நாங்கள் விற்போம், சிலவற்றை நாங்கள் கருணை இல்லத்திற்கு அனுப்புவோம்.

பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வோம். நமக்கு பயன்படாதது வேறு ஒருவருக்கு பயன்படலாம். நமக்கு பயன்படாது என நாம் தூக்கி போடும் பொருட்கள் இந்த பூமிக்கு பல ஆபத்துகளை கொடுக்கும், அதை தடுக்கவே இந்த அமைப்பை நான் ஆரம்பித்தேன் என்கிறார் ஆன்னி.

கதாநாயகியாக வலம் வருவார் என நாம் நினைத்த பெண், அது என் வழி அல்ல. என் வழி தனி வழி என பூமியை பாதுகாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார், ஆணிக்கு நம் பாராட்டுக்கள்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close