Mobile மோகத்தால் நர்சிங் மாணவி செய்த அதிர்ச்சி சம்பவம் : Nursing Student Trapped By Fake Kidney Scam

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கிபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஹைதராபாத்தில் நர்சிங் படித்து வருகிறார். வெளியூரில் படிக்கும் மகளுக்கு பணம் தேவை இருக்கும் என்பதால் மகளிடம் தன் டெபிட் கார்ட்டை தந்தை தந்துள்ளார். வீடு கட்டுவதற்காக அதில் 20 லட்சம் ரூபாயும் அவர் போட்டுள்ளார்.

null

மகளோ 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லியான மொபை வாங்க எண்ணி, தந்தை பணத்தை எடுத்துள்ளார். இதனை அடுத்து தந்தை தனது வங்கி கணக்கை சரி பார்க்கும் முன்னர் அந்த பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இதற்காக அவர் தனது சிறுநீரகத்தை விற்று தந்தையின் அக்கவுன்டில் பணம் போட திட்டமிட்டார்.

null

இதுகுறித்து ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த விளம்பரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு ரூ 7 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள நபரை அவர் தொடர்பு கொண்டபோது டாக்டர் பிரவீன் ராஜ் என்பவர் பேசுவதாகவும் சிறுநீரகம் பொருத்த மாக இருந்தால் ஆரம்ப தொகையாக 3.5 கோடி வழங்கப்படும் என்றும் சிறுநீரகம் பெற்றவுடன் மீதி தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.

null

இதனை அடுத்து மாணவி தனது மருத்துவ அறிக்கை உள்பட அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் அவர் சிறுநீரகத்தை தானம் செய்யத் தகுதியுடையவர் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுநீரகம் தானம் செய்வதற்கு முன்னர் ஒரு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 16 லட்ச ரூபாய் அந்த மாணவி கட்ட வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து மாணவி தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்சம் எடுத்துக் கட்டியுள்ளார். அதன்பிறகு அவர் டெல்லிக்குச் சென்று சிறுநீரகத்தை தானத்தை வழங்கி விட்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

null

அவர் கூறியபடி அந்த நர்சிங் மாணவி டெல்லி சென்ற போதுதான் அது ஒரு போலியான முகவரி என்று தெரியவந்தது. இதனை அடுத்து அவர் காவல் துறையை அணுகி தான் 16 லட்ச ரூபாய் ஏமாந்ததை தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தற்போது அந்த மோசடி நபரை கண்டுபிடிப்பதற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவரது தந்தையிடம் கூறப்பட்ட நிலையில் மாணவி தந்தைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் அதன்பின்னர் மாணவி அவருடைய தோழிகளில் ஒருவர் வீட்டில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close