அம்மா வளையல அடகு வச்சி Business ஆரம்பிச்சேன் : Anandhi Prakash Interview About Boutique Business

thumb_upLike
commentComments
shareShare

ஐ.டி வேலையை தூக்கி எறிந்து இன்றைக்கு LAKSHMI BOUTIQUE-கின் பிசினஸ் பெண்ணாக கலக்கும் ஆனந்தி பிரகாஷ் உடன் ஒரு நேர்காணல்

ஐ.டி வேலை

null

நான் ஒரு இஞ்சினியரிங் பட்டதாரி, அதனால் ஐ.டி வேலைக்கு சென்றேன். ஒரு நான்கு, ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் விளம்பர படங்களில் அசோசியட் டைரக்டராக பணியாற்றினேன்.

AD AGENCY

அதன்பின் நானே சொந்தமாக ஒரு AD AGENCY தொடங்கி, விளம்பர படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அங்கு ஆணாதிக்கம் அதிகமாக இருந்தது, இருந்தாலும் என் விடா முயற்சியால் அங்கு வெற்றி பெற்றேன். நிறைய விளம்பரப் படங்கள் எடுத்தேன். அதற்கு முழு ஒத்துழைப்பு என் பெற்றோரிடம் இருந்து கிடைத்தது. அப்பாவிடம் கேட்டால் பணம் தந்திருப்பார், ஆனால் என் அம்மா என் மீது நம்பிக்கை வைத்து கையில் இருந்த வளையல்களை கழட்டி கொடுத்தார். அன்று என் அம்மா அதை செய்யவில்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன்.

கல்யாண வாழ்க்கை

null

நிறைய பேர் இழிவாக பேசுவார்கள், என் அம்மாவிடம் நான் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். ஒரு கட்டத்தில் கல்யாண வயது வந்தது, எனக்கு திருமணமும் ஆனது. என் பெற்றோர் வீட்டில் எனக்கு கிடைத்த ஆதரவு அங்கு எனக்கு ஐந்து மடங்கு அதிகமாக கிடைத்தது. எனக்கு மாமியார் இல்லை, என் மாமனாரும் கணவரும் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள். வேலை முடிந்து இரவு லேட்டாக வந்தாலும் புரிந்து கொண்டார்கள். அதேபோல் நான் என் கடமையை சரியாக செய்தேன். நான் நன்றாக சமைப்பேன், என் மகனுக்கு தினமும் நான் தான் சமைத்து தருவேன், வீட்டில் அனைத்து வேலைகளையும் பார்ப்பேன். ஒரு பெண்ணாக இரண்டையும் நான் பார்த்து வந்தேன்.

புடவையால் கிடைத்த மரியாதை

நான் எங்கு சென்றாலும் சரி புடவையில் தான் இப்போது செல்கிறேன். நான் சல்வார் அணிந்து சென்றபோது கிடைக்காத மரியாதை புடவை அணிந்து சென்றபோது கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை நான் புடவையை விரும்பி அணிகிறேன்.

LAKSHMI BOUTIQUE

SAREE BOUTIQUE ஐடியா லாக்டவுனில் தான் கிடைத்தது. லாக்டவுனில் அனைத்தும் முடங்கிவிட்டது, எந்த விளம்பர படமும் எடுக்க முடியவில்லை. அப்போது தான் இந்த புடவை பிசினஸ் ஐடியா கிடைத்தது.

இழிவான பேச்சுக்கள்

null

நான் இந்த ஐடியாவை சொன்னபோது நிறைய உறவினர்கள் கேலி செய்தார்கள். புடவை வியாபாரம் செய்ய போகிறாயா, நீ புடவையை மேல் போட்டு காட்ட போகிறாயா என நிறைய பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் நான் காதில் வாங்கி கொள்ளவில்லை.

என்னுடைய தனித்துவம்

null

இந்த துறையில் பெண்ணாதிக்கம் அதிகமாக இருந்தது, இருந்தாலும் என் தனித்துவத்தை காட்டி ஜெயிக்க வேண்டும் என எண்ணினேன். பொதுவாக புடவையில் இரண்டு நிறங்கள் தான் இருக்கும். ஆனால் நான் தயாரிக்கும் புடவையில் மூன்று நிறங்கள் இருக்கும். அதேபோல் பிரபலங்கள் கட்டும் புடவையை அப்படியே தயாரித்து தருவேன். அதுவும் கம்மியான விலையில். பிரபலங்கள் கட்டும் சேலை 70000 கூட வரும், அவற்றை நான் 3000 ரூபாய்க்கும் குறைவாக செய்து தருவேன். அந்த போட்டோவை காட்டினால் போதும் அதேபோல் டிசைன் மாறாமல் செய்து விடுவேன். இது தான் என்னுடைய தனித்துவம்.

வெற்றி

ஒரு வருடத்தில் எதிர்பாக்காத அளவு இதில் எனக்கு வெற்றி கிடைத்தது. என்னை கேலி செய்தவர்களே இன்று என்னிடம் தான் சேலை வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட பத்து நாடுகளில் இருந்து நம்மிடம் சேலை வாங்குகிறார்கள். நான் செய்து தரும் சேலைக்காக ஒரு மாதம் கூட காத்திருக்க தயாராக இருக்கிறார்கள். இதுவே என் வெற்றி. குறைந்த விலையில் அதிகமாக விற்பனை இதுதான் என் லட்சியம். நடுத்தர மக்களுக்காக நான் இதை செய்கிறேன்.

பெண்களுக்கு சுயசம்பாத்தியம் வேண்டும்

null

பெண்களால் முடியாதது எதுவுமில்லை, நம் முன்னாள் முதல்வரில் இருந்து இன்றைய குடியரசு தலைவர் வரை அனைவரும் பெண்கள் தான். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். வீட்டில் உட்காந்து மற்றவர்கள் பற்றி புறம் பேசுவதை தவிர்த்து விட்டு உங்களுக்கு கிடைக்கும் ஐடியாவை கொண்டு நீங்கள் சாதிக்கலாம். சுய சம்பாத்தியம் என்பது பெண்களுக்கு அவசியம்.

சாதிக்க நினைக்கும் அனைத்து பெண்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் ஆனந்தி பிரகாஷ்.  

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close