குறைந்த விலையில் பெண்கள் நடத்தும் கடலோர மீன் உணவகம் | Pattinapakkam Moongil Restaurant

thumb_upLike
commentComments
shareShare

பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க துவங்கி விட்டார்கள். பெண்கள் இல்லாத ஹரியே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்கள் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார்கள்.

மூங்கில் ரெஸ்டாரன்ட் இந்த ஹோட்டலின் சிறப்பே மீன் குழம்பு, சாதம், இறால் தொக்கு, சுராபுட்டு, நண்டு, கடம்பா, சுறா கட்லட், உள்ளிட்ட பல அசைவ உணவுகளை வெறும் 40 ரூபாய்க்கு தருகிறார்கள். ஆனால் இந்த உணவின் சுவை எண்ட 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது என்கிறார்கள் இங்கு வரும் கஸ்டமர்கள்.

இந்த ஹோட்டலை நடத்தும் சரண்யா, சுகன்யா சகோதரிகள் இந்த் ஹோட்டல் உருவானது குறித்தும், அவர்கள் குறித்தும் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

மூங்கில் ரெஸ்டாரன்ட் ஐடியா வந்தது எப்படி ?

எங்கள் வீட்டில் நன்றாக சமைப்போம், என் தம்பியின் நண்பர்கள் வந்தாலும் நன்றாக சமைப்போம். அப்போது அனைவரும் நீங்கள் ஏன் ஒரு ஹோட்டல் திறக்க கூடாது என்றார்கள். அவர்கள் கொடுத்த ஐடியாவில் உருவானது தான் மூங்கில் ரெஸ்டாரன்ட்.

தம்பிக்காக செய்கிறோம்

நான் ஈ.சி.ஆர் டைப்பில் வைக்க வேண்டும் என்பதற்காக மூங்கில் ரெஸ்டாரன்ட் என வைக்க சொன்னேன் என்றார் சுகன்யா. நாங்கள் ரொம்ப கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள், சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்தோம், படிக்க கூட கஷ்டப்பட்டோம். சாப்பிட கூட கஷ்டப்பட்டோம்.

எங்களின் பூர்விகமே மீன் விற்கும் வியாபாரம் தான். நாங்கள் வாடகை செல்லும் மீன்கள் மிஞ்சி விடும், அது நஷ்டமாக இருந்தது. ஏன் இதை வைத்து சமைத்து நாலு பேருக்கு போட கூடாது என நினைத்தோம். அதன்பின் தான் இந்த ஹோட்டல் ஆரம்பித்தோம்.

நாங்கள் அக்கா, தங்கைகள் நாலு பேரும் ஹோட்டல் நடத்தி தம்பிக்கு உதவி செய்து வருகிறோம்.

உணவின் தரம்

நாங்கள் எங்கள் வீட்டில் எப்படி சமைப்போமோ, அப்படியே இங்கும் சமைப்போம். தரம் அதனால் நன்றாக இருக்கும். சில நேரங்களில் நாங்களும் இங்கேயே சாப்பிட்டு விடுவோம். தரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் இந்த் சகோதரிகள்.

நல்ல தரமான அசைவ உணவு கம்மியான விலையில் சாப்பிட வேண்டும் என்றால் பீச் ரோட்டில் உள்ள மூங்கில் ரெஸ்டாரன்ட் செல்லுங்கள்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close