Actress Yamuna Skin Care and Fitness Secret | Celebrities skin care | Avalglitz Health care

thumb_upLike
commentComments
shareShare

பரத் நடிப்பில் வெளிவந்த வெயில் படத்தில் பரத்தின் தங்கையாக அறிமுகமானவர் யமுனா சின்னதுரை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், இவர் பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.

null

இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டது ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தான். பொதுவாகவே பேய் சீரியல் என்றால் பயமுறுத்தும் கதாபாத்திரம் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும். ஆனால், முதன் முதலாக பேய் என்றால் நல்ல பேய் என்று பெயர் வாங்கியவர் நடிகை யமுனா. யாரடி நீ மோகினி சீரியலில் சித்ரா என்ற பேய் கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை யமுனா.

null

யமுனா என்றால் பிட்னஸ் என்று சொல்லும் அளவுக்கு பிட்னஸில் இவருக்கு ஆர்வம் அதிகம். யமுனா அவரின் ஸ்கின் கேர் மற்றும் பிட்னஸ் சீக்ரெட்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஸ்கின் கேர்

null

ஸ்கின் கேர் என்று வரும்போது, சன் ஸ்கிரீன் ரொம்ப அவசியமான ஒன்று. பேஸ் வாஷ் காலை மற்றும் இரவில் கட்டாயம் பண்ண வேண்டும். உங்கள் சருமத்திற்கு என்ன ஒத்துகொள்ளுமோ அந்த நைட் கிரீம் பயன்படுத்துங்கள்.

இது தவிர்த்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், பழங்கள், காய் கறிகள் சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பிட்னஸ்

null

எனக்கு உடற்பயிற்சி செய்வது ரொம்ப பிடிக்கும், நீங்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் தினமும் ஒரு பதினைந்து நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுக்குள் நீங்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். உடற்பயிற்சி செய்தால் முகம் பளபளப்பாக மாறும்.

என்னுடைய டையட்

null

டையட் எல்லாம் நான் பின்பற்ற மாட்டேன். டையட் என்னும் வார்த்தையே எனக்கு பிடிக்காது. எப்போதும் குறைவாக உண்ண வேண்டும், வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. சாதம் அளவாக எடுத்துக் கொள்வேன், மற்றபடி எந்த டையட்டும் நான் இருப்பதில்லை.

இவ்வாறு தன்னுடைய பிட்னஸ், டையட் மற்றும் ஸ்கின்கேர் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் யமுனா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close