FACE FRESH-ஆ இருக்க SIMPLE TIPS : Serial Actress Swathi Sharma Skincare Routine | Ninaithale Inikkum

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

சினிமாவில் மட்டுமல்ல சீரியல் தொடர்களிலும் வெளி மாநிலத்திலிருந்து பல கதாநாயகிகள் நடிக்க வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் இருந்து வந்திருப்பவர் தான் ஸ்வாதி ஷர்மா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

null

அந்த சீரியலில் இவர் ஏற்று நடிக்கும் பொம்மி கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த பொம்மி கதாப்பாத்திரத்தின் மூலம் பல ரசிகர்களை இவர் வசம் கொண்டுள்ளார் ஸ்வாதி.

தற்போது இவர், அவரின் ஸ்கின் கேர் சீக்ரெட்டுகளை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

ஸ்கின் கேர்

null

சருமம் ஆரோக்கியமாக இருக்க அடிப்படை தேவை தண்ணீர் தன். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். தினமும் சூட்டிங் இருக்கும், அதனால் தினமும் மேக்கப் போட வேண்டும், இதனால் சருமம் நிச்சயம் பாதிக்கப்படும். அதனால் நான் வெட்டிற்கு வந்தவுடன் மேக்கப்பை என் முகத்திலிருந்து முழுவதுமாக எடுத்து விடுவேன்.

சருமம் பாதிக்காமல் இருக்க வாரத்திற்கு இருமுறை பேஸ் மாஸ்க் பயன்படுத்துவேன். கடலைமாவு, தயிர், மஞ்சள் சேர்த்து முகத்தில் தேய்த்து விட்டு, 30 நிமிடம் கழித்து கழுவி விடுவேன்.

அதேபோல் மாய்ஸ்ட்ரைசர் போட மறக்க மாட்டேன், சன் ஸ்கிரீன் ரொம்ப முக்கியமானது, வெளியில் செல்லும்போது கட்டாயம் அதை முகத்தில் போட்டுக் கொள்வேன்.

ஹேர் கேர்

null

தினமும் இரவு ஐந்து பாதாம் ஊற வைத்து விடுவேன், மறுநாள் காலையில் நான் அதை உட்கொள்வேன், இதுவே என் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க காரணமாக நான் நினைக்கின்றேன். தினமும் ஹீட் அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள், அதனால் வாரத்திற்கு மூன்று முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து விடுவேன். அது கூந்தலை பாதிப்பில் இருந்து தடுக்கும்.

உணவு

null

நாம் வெளியில் இருந்து எத்தனை பொருட்கள் வாங்கி பயன்படுத்தினாலும், நம் உணவு பழக்கம் சரியாக இருந்தால் தான் நம் சருமம், கூந்தல் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் ஆயில் பொருட்கள் மற்றும் கட உணவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுவது நல்லது.

இவ்வாறு தன்னுடைய ஸ்கின் கேர் மற்றும் ஹேர் கேர் ரகசியங்களை ஸ்வாதி ஷர்மா நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close