என்னோட பிரச்சனைய யாருக்கிட்டயும் சொல்ல முடியாது | Actress Sona Emotional Interview | Abhi Tailor

thumb_upLike
commentComments
shareShare

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் அதிக படங்கள் நடித்தவர் நடிகை சோனா. ரஜினிகாந்தின் குசேலன், கோ, குரு என் ஆளு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

null

படங்களில் நடிப்பதை தாண்டி சோனா Uniq என்ற பேஷன் கடையும் வைத்திருக்கிறார். கடைசியாக இவர் வரலட்சுமி சரத்குமார் நடித்த Chasing படத்தில் நடித்தார். தற்போது சோனா சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

தன்னுடைய திரை பயணம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சோனா நம்முடன் பகிர்ந்துள்ளார்.

பிசினஸ் ஆரம்பிக்க காரணம்

null

சினிமாவில் எவ்வளவு காலம் இருக்க முடியும், அதனால் என்னுடைய கிரியேட்டிவிட்டி, ஆசைகள் இவையெல்லாம் கொண்டு உருவானது தான் என் பிசினஸ் ஐடியா. பிசினஸ் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

சினிமாவே எனக்கு பிடிக்காது

முதலில் எனக்கு சினிமாவே பிடிக்காது, நான் ஒரு கடைக்கு சென்ற போது அங்கு ஒரு மேனேஜர் என்னைப் பார்த்து ஒரு சினிமா ஆபர் வழங்கினார், பல நாட்கள் கழித்து குடும்பத்தில் பணப்பிரச்சனை இருந்ததால் நான் சம்மதித்தேன். அந்த சமயத்தில் சினிமா ஹீரோயின்கள் குறித்து நிறைய தவறான விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம், அதனால் வேண்டாம் என நினைத்தேன். அப்போது நான் ஒரு லாண்டரி கடையில் வேலை பார்த்தேன் அங்கு எனக்கு 350 ரூபாய் தான் சம்பளம், ஆனால் என் முதல் படத்திற்கு எனக்கு 25000 சம்பளம் கொடுத்தார்கள், அதுவும் நான் வெறும் 12 நாட்கள் மட்டுமே சூட்டிங் சென்றேன்.

சினிமாவில் கிளாமர்

நான் சொன்ன மேனேஜர், ஜீவிதா ராஜசேகர் அவர்களின் மேனேஜர். ஜீவிதா தான் என்னை பார்த்து மேனேஜரிடம் சொல்லி உள்ளார். அவர் மூலமே என் திரைப்பயணத்தில் கிளாமரும் என்ட்ரி ஆனது. அவர்களின் தெலுங்கு படத்தில் கிளாமராக நடித்தேன், அப்போது ஆரம்பித்தது தான் தொடர்ந்து அந்த மாதிரியான படங்கள் தான் வந்தது. ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டுள்ளேன்.

விவேக் மற்றும் வடிவேலு

null

புத்திசாலியான காமெடியன் தான் விவேக் சார். அவர் நல்ல மனிதரும் கூட, எனுடேய் நல்ல நண்பர். எனக்கு பேமிலி பிரண்ட்டாக இருந்தார். ஏதாது ஒரு கஷ்டம் என்றால் உடன் வந்து தோல் கொடுக்கும் நண்பர் விவேக் சார்.

null

வடிவேலு சார் மொத்தமாக பாடி லேங்குவேஜ் தான், அந்த அலப்பறை எல்லாம் தான் அவர் ஸ்டைல்.

எனக்கு மட்டும் உள்ள பெருமை

null

தமிழில் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் நான் நடித்து விட்டேன், அதேபோல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டேன். அப்போது கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணுவர்த்தன் படத்திலும் நான் நடித்து விட்டேன். அனைத்து சூப்பர்ஸ்டார்களுடன் நடித்த பெருமை எனக்கு மட்டுமே உள்ளது.

நிறைய பிரசர் வந்தது

null

நடிகையாக இருக்கும்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நான் தயாரிப்பாராக மாறியபோது எல்லா பக்கங்களில் இருந்து பிரச்சனை தான். அதில் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

சீரியல்

சினிமாவில் விட சீரியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் தான். சீரியலே பெண்களை மையப்படுத்தி தான். ஆனான் ஏனென்று தெரியவில்லை எனக்கு மட்டும் வில்லி கதாப்பாத்திரங்களாகவே வருகிறது. சினிமாவில் கிளாமர் என்றால் இங்கு எனக்கு வில்லி கதாப்பாத்திரம்.

சினிமாவில் டபுள் மீனிங் வசனங்கள்

null

டபுள் மீனிங் வசனங்கள் சினிமாவில் எப்போதும் உள்ளது, அப்போது கம்மியாக இருந்தது. இப்போது டபுள் மீனிங் வசனங்கள் ரொம்ப ஓப்பனாக நிறையவே உள்ளது. அதனாலேயே நிறைய படங்களை வேண்டாம் என ஒதுக்கினேன். கோ படத்தில் அந்த மாதிரி ஒரு வசனம் இருக்கும், அது வேறு ஒரு நடிகையை இமிடேட் செய்து பண்ணியது தான், அதற்கு ஒரு பஞ்சாயத்து எல்லாம் போச்சு. ஆனால் நான் அதை நடிக்க ஒப்புக்கொள்ள காரணம், எனக்கு கே.வி.ஆனந்த் சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான்.

சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு

null

சினிமா அப்போது விட இப்போது மோசமாக தான் உள்ளது. ஆனால் அப்போது இருந்த பெண்களுக்கு இதை கையாள தெரியாது, இப்போது உள்ள பெண்களுக்கு கையாள தெரிந்து உள்ளது. பெண்கள் தைரியமாக இருக்கிறார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை

நான் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமாக உள்ளேன், சினமா, சீரியல், பிசினஸ் என ரொம்ப பிசியாக இயங்கி கொண்டிருக்கிறேன்.

அடுத்த புராஜெக்ட்

null

நான் சினிமாவிற்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது, இந்த வருடம் நான் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன். சபரிமலைக்கு பெண்கள் ஏன் போக கூடாது என ஒரு பெண் கேஸ் போட்டதே, அந்த பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த ஒரு விஷயம் ரொம்ப முக்கியம்

null

புதிதாக சினிமாவிற்கு வருபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான் எப்போதும் ஒரே மாதிரியாக இருங்கள். சிலர் வாழ்க்கையில் அடிபட்டு பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் சாதிப்பார்கள், ஆனால் புகழ் வந்தவுடன் அவர்களின் குணமே மாறிவிடும், அந்த குணத்தினால் மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருங்கள்.

இவ்வாறு நடிகை சோனா பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close