Actress Shrutika Arjun Skin Care Revealed | Celebrities Makeup Time | Avalglitz

thumb_upLike
commentComments
shareShare

தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஸ்ருதிக்கா. சூர்யாவுடன் ஸ்ரீ, மாதவனுடன் நல தமயந்தி, ஜீவாவுடன் தித்திக்குதே படங்களில் நடித்தார்.

null

அதன்பின் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மக்களின் பேவரைட் டி.வி.ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மூலம் அனைவரின் பேவரைட்டாக மாறிவிட்டார்.

null

ஸ்ருதிகாவிற்கு வயதாக ஆக இளமை கூடுகின்றது. அவரின் அழகு ரகசியங்கள் குறித்து நம்முடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

ஸ்கின் கேர்

நம்முடைய சருமம் மிக முக்கியமானது. அதை எந்த அளவு பராமரிக்கின்றோமோ அந்த அளவு ஆரோக்கியமாக இருக்கும்.

மாய்ஸ்ட்ரைசர்

null

நம் ஊரில் எப்போதுமே சம்மர் தான், அதனால் மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தும்போது அளவாக பயன்படுத்த வேண்டும். குளிரான இடங்களுக்கு செல்லும்போது அதிகமாக பயன்படுத்தலாம், ஆனால் குறைவான அளவு மாய்ஸ்ட்ரைசர் எப்போதுமே நல்லது.

வெள்ளரிக்காய்

null

முகத்தில் பருக்கள், அல்லது எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், வெள்ளரிக்காய் எடுத்து அதை துருவி முகத்தில் போட வேண்டும். அதன்பின் வெறும் நீரினால் கழுவினால் போதும். இது கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

ஐஸ் க்யூப்ஸ்

null

ஒரு துணியில் ஐஸ் கட்டிகள் எடுத்து உங்கள் முகத்தில் மசாஜ் செய்யுங்கள், இதை செய்தாலே முகம் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும்.

இவ்வாறு தன்னுடைய அழகு ரகசியங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close