Actress Parvathy About Skincare & Haircare Routine Tips

thumb_upLike
commentComments
shareShare

சன் டிவி – யில் தொகுப்பாளினியாக மக்களுக்கு அறிமுகமான பார்வதி, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியல் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். அதைத்தொடர்ந்து, ஜீ தமிழ் சேனலின் ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த சோவின் டைட்டில் வின்னராக வந்தார்.

null

இவருக்கென தனி ரசிகர் படையே வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையல்ல. ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கும் பார்வதி அவரின் மேக்கப் மற்றும் ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மேக்கப்

null

எனக்கு ரொம்ப சிம்பிளான மேக்கப் தான் ரொம்ப பிடிக்கும். எனக்கு நானே மேக்கப் போடுவேன், யாரையும் எனக்கு மேக்கப் போட விட மாட்டேன். நம்முடைய முகத்திற்கு என்ன நன்றாக இருக்கும் என்பது நமக்கு தானே தெரியும், அதனால் நானே மேக்கப் போடுவேன். ஆனால் மீடியாவிற்குள் வரும்போது, எனக்கு மேக்கப் போடவே தெரியாது, இப்போது கற்றுக் கொண்டேன்.

ஸ்கின்கேர்

null

தினமும் பத்து மணி நேரத்திற்கு மேல் மேக்கப் என்னுடைய ஸ்கின்னில் இருப்பதால், சருமம் பாதிக்கப்படும். அதை சரிசெய்ய நான் பார்லருக்கு எல்லாம் செல்ல மாட்டேன். வீட்டில் உள்ள பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துவேன். தக்காளி, தயிர், தேன், கற்றாழை இவை தான் என்னுடைய சருமத்திற்கு நான் பயன்படுத்துவது. ஷூட் இல்லாமல் வீட்டில் இருந்தால், நான் மேக்கப் போடாமல் இருப்பதை தான் விரும்புவேன்.

ஹேர் கேர்

null

நீங்கள் இப்போது பார்ப்பது என் உண்மையான கூந்தலே இல்லை. என்னுடைய கூந்தல் அடர்த்தியான சுருள் முடி. மீடியாவிற்காக நான் அதை மாற்றி விட்டேன். அதற்காக வீட்டில் எல்லாம் திட்டும் வாங்கினேன். தினமும் என்னுடைய கூந்தலில் ஹீட் பயன்படுத்தப்படுகிறது, அதில் நிறைய தலைமுடியை நான் இழந்துவிட்டேன்.

null

ஆனால் அதையும் மீறி எனக்கு கூந்தல் நன்றாக இருக்கிறது என்றால் அது என் அம்மா தயாரித்து தரும் ஸ்பெஷல் எண்ணெயால் தான். கேரளாவில் இருந்து வாங்கி வந்த தேங்காய் எண்ணெய்யில் செம்பருத்தி, நெல்லிக்காய், காற்றாழை, கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து அம்மா எண்ணெய் செய்து தருவார். அதை தான் நான் என் தலிமுடிக்கு பயன்படுத்துகிறேன். அதுவே என் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க காரணம்.

இவ்வாறு தன்னுடைய மேக்கப், ஸ்கின்கேர், ஹேர் கேர் சீக்ரெட்டுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close