விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு பதில் கொடுத்த நடிகை நமீதா.

thumb_upLike
commentComments
shareShare

விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு பதில் கொடுத்த நடிகை நமீதா.


கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை நமீதா பிறகு விஜய்,அஜித்,பார்த்திபன் மற்றும் சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து சினிமாவை தக்க வைத்து கொண்டவர்.தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழியிலும் நடித்துள்ளார்.

நடிகை நமீதா 2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்திரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.2022ஆம் ஆண்டு இவர் இரட்டை குழந்தைக்கு தாய் ஆனார்.சமீப காலமாக நடிகர் நடிகைகள் விவகாரத்து செய்வது வாடிக்கையான ஒன்றாக ஆகியுள்ளது.அந்த வகையில் நடிகை நமிதாவும் தன் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என்ற செய்தி தீயாக பரவிய நிலையில் ,இவை அனைத்திற்கும் ,

நடிகை நமீதா பதில்'இந்த செய்தி வருவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பாக தான் நானும் என் கணவரும் இனைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தேன்,அப்படி இருந்தும் இது போன்ற வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

சினிமாவில் இது போன்ற நிறைய வதந்திகளை ஏற்கனவே நிறைய பார்த்து விட்டேன்.எனவே என் கணவர் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.நாங்கள் இருவரும் இதை நினைத்து கவலை கொள்ளவில்லை"எனக் கூறியுள்ளார்.

AvalGlitz in Social Media
Share to your pages!
Close