Clear Skin கிடைக்க இத Follow பண்ணுங்க : Actress Meetha Raghunath About Skincare Tips

thumb_upLike
commentComments
shareShare

அறிமுக இயக்குனர் தர்புகா சிவா எழுதி, இயக்க உள்ள படம், முதல் நீ முடிவும் நீ. சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்டது.

null

1999 ம் ஆண்டு பள்ளி பருவ காதலை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ரேகா கேரக்டரில் மீதா ரகுநாத் என்னும் புதுமுக நடிகை நடித்திருந்தார்.

null

இந்தப்படத்தில் நடித்து மூலம் பல ரசிகர்களை அவர் கவர்ந்தார். அவரின் சரும பராமரிப்பு குறித்தும் ஹேர் கேர் குறித்தும் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஹேர் கேர்

null

நம் இந்திய பெண்கள் அனைவருக்கும் சுருள் முடி தான். ஆனால், நாம் பரட்டை முடி என்று சொல்கிறோம். உண்மையாகவே நமக்கு சுருட்டை முடியை பார்த்துக் கொள்ள தெரியவில்லை. அதை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரிந்தாலே போதும், உங்கள் முடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தலைக்கு குளித்த பின், ஈரமாக இருக்கும்போதே அதை சீவி, தேங்காய் எண்ணெய்யோ, ஹேர் சீரமோ பயன்படுத்தி விடுங்கள். சுருட்டை முடி இருப்பவர்கள், தலை காய்ந்த பின் சீவ கூடாது. அப்படி செய்தால் தலைமுடி உடைந்து விடும்.

ஸ்கின் கேர்

null

உங்கள் சருமத்தை என்றும் மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு சருமமும் அழகானது, நான் கலராக வேண்டும் அப்படி எல்லாம் எண்ணாதீர்கள். உங்களுடைய சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் சருமம், எந்த வகையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப ஸ்கின் கேர் பின்பற்றுங்கள்.

உங்கள் முகத்தை காலையும், இரவும் கட்டாயம் கழுவ வேண்டும், முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமத்திற்கேற்ப மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துங்கள். கற்றாழை பயன்படுத்துவது முகத்திற்கு நல்லது.

இவ்வாறு மீதா ஸ்கின் மற்றும் ஹேர் கேர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close