வாழ்க்கைல ஒருமுறையாவது இத எல்லாரும் கண்டிப்பா பண்ணனும் : Jayachitra & Amresh Exclusive Interview

thumb_upLike
commentComments
shareShare

தனது துறுதுறு நடிப்பால் 70-களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஜெயசித்ரா. பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், வெள்ளிக்கிழமை விரதம் படம் மூலமாக மொத்த தாய்மார்களின் பேவரைட்டாக மாறினார். கம்பீரமான நடிப்பால் மக்களை கவர்ந்த இவர், திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் நடித்தார்.

null

பாலசந்தர் தொடங்கி மணிரத்னம் வரை பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள இவர், நடிகை மட்டுமல்ல இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.

null

இன்று மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜமாதா செம்பியன் மாதேவியாக நடித்துள்ள இவர், நிஜத்திலும் ராஜமாதா தான். பல இன்னல்கள், கஷ்டங்களை தாண்டி திரைத்துறையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜெயித்தவர்.

null

இவரின் மகன் அம்ரீஷ் திரைத்துறையில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் உள்ளார். மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அம்ரீஷ் தன் தாய் ஜெயசித்ராவின் சொல்லை மீறாதவர். தன் தாய் மேல் பக்தியும் அன்பும் கொண்ட இவர் அதைப் பற்றி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

நடிகை ஜெயசித்ராவும் குழந்தை வளர்ப்பு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ஜெயசித்ரா குறித்து அம்ரீஷ்

null

அம்மா என்றால் அவர் தான் எனக்கு எல்லாமே. சிறுவயதில் நிறைய தொந்தரவு கொடுத்துள்ளேன், ஆனால் அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுள்ளேன். அவர் சிறந்தவர். பொன்னியின் செல்வன் டப்பிங் முடிந்த பிறகு அம்மாவிற்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது அவருக்காக நான் திருப்பதி மலை மேல் நடந்தே சென்று வேண்டினேன். திரும்பி வந்தபோது நன்றாக இருந்தார்.

null

எப்போதும் திருப்பதி செல்வோம், ஆனால் அம்மாவின் செல்வாக்கால் வி.ஐ.பி தரிசனத்திற்கு செல்வோம். ஆனால் இந்த முறை மக்களோடு மக்களாக படி ஏறி நடந்து கடவுளை பார்த்து வந்தேன். என் அம்மாவுடன் சேர்த்து என் மனைவி, குழந்தை என எல்லோரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். சந்தோசமாக இருக்கிறோம்.

குழந்தை வளர்ப்பு

null

ஜெயசித்ரா குழந்தை வளர்ப்பு பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். குழந்தைகளை அடித்து வளர்க்க கூடாது, எந்த தவறு செய்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். என் மகன் என் பேச்சை மீற மாட்டார், எப்போதும் ஒரு அன்பும், மரியாதையும் என் மீது கொண்டுள்ளார்.

null

என் மகன், மருமகள், பேத்தி அனைவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம். ஒரு பெண், புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த குடும்பத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் எந்த குடும்பத்திலும் பிரசன்னை வராது.

இவ்வாறு குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து ஜெயசித்ராவும், அவரை குறித்து அவரது மகன் அம்ரீஷும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close