முகம் பளபளப்பாக இருக்க Homemade Tips : Actress Divya Bharathi Skin Care Secrets Revealed

thumb_upLike
commentComments
shareShare

திவ்யா பாரதி பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அந்த ஒரே படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், அவரின் சரும பராமரிப்பு குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

தண்ணீர்

null

சரும பராமரிப்பு குறித்து அவர் கூறும்போது, தண்ணீர் அதிகமாக குடிக்க நம்மை வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் கூறும்போது, அனைவரும் சொல்வதுதான் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்காத அளவு நன்மையை அது உங்களுக்கு நிச்சயம் தரும். நான் ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்துவேன்.

ஸ்கின் கேர்

null

முகத்தை நன்றாக கழுவி மாஸ்ட்ரைசர் கட்டாயம் போட வேண்டும். வெளியில் செல்லும்போது மட்டுமல்ல வீட்டில் இருக்கும்போது கூட சன்ஸ்கிரீன் போட வேண்டும். நான் என் அம்மாவிடம் அடிக்கடி சன் ஸ்கிரீன் போட சொல்லி அறிவுறுத்துவேன்.

உங்கள் சருமத்திற்கு எந்த பேஸ்வாஷ், மாஸ்ட்ரைசர் சேருகிறதோ அதை பயன்படுத்துங்கள்.

பழங்கள்

null

நான் பேச்சுலர் படத்தில் நடிக்கும் போது எனக்கு மேக்கப் கிடையாது. இதனால் படத்தின் ஒளிப்பதிவாளர் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். இன்றும் நான் அதை செய்து வருகிறேன். அது என்னவென்றால் தினமும் ஏதாவது ஐந்து பழங்கள் உட்கொள்வது. இன்றும் காலை அதை நான் செய்து வருகிறேன்.

திவ்யா பாரதியின் சீக்ரெட்

null

தூக்கம் மிக அவசியம். எப்போதும் சந்தோஷமாக இருந்தால் அதுவே உங்களின் சருமத்தில் பிரதிபலிக்கும். 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும் சந்தோஷமாக இருக்க முடியாது தான். ஆனால் நீங்கள் கவலை கொள்ளும் நேரத்தில் சந்தோசமான விஷயங்களை பற்றி நினைத்துப் பாருங்கள். மற்றவர்களுக்கு கிடைக்காதது உங்களுக்கு என்ன கிடைத்துள்ளது என்று பார்த்தால் நிச்சயம் சோகமாக இருக்க மாட்டீர்கள்.

உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களை நீங்கள் சந்தோசப் படுத்த முடியும். சந்தோசமாக இருங்கள் நிச்சயம் அனைவர் கண்ணுக்கும் அழகாக தெரிவீர்கள் என திவ்யா பாரதி முக்கியமான அழகு குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close