தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாமிலி.

1 Reactions
thumb_upLike
commentComments
shareShare

தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாமிலி.

 

தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்த இந்திய தமிழ் நடிகை மற்றும் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற மேலும் மல்லூடி என்ற மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டி கொண்ட குழந்தையாக நடித்ததற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை பெற்ற பேபி ஷாமிலி என அனைவராலும் அறியப்பட்ட நடிகை ஷாமிலி பற்றி இந்த பதிவில் காண்போம்.

இரண்டு வயதில் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் மணிரத்னம் அவர்களின் அஞ்சலி என்னும் தமிழ் திரைப்படத்தின் வழியாக நிறைய புகழை பெற்று அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இந்த படத்தில் நடிகை ஷாமிலி மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையாக நடித்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

மேலும் இவர் வீர சிவாஜி என்னும் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்துள்ளார்.தற்போது முப்பத்து ஐந்து வயதை கடந்துள்ளார்.என்னதான் நடிகை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு நடிகையாக சினிமாவில் பதியவில்லை என்பதே சங்கடமான உண்மை.

பிறகு 2009ஆம் ஆண்டு ஒய் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.இந்த படம் குறித்து பல சர்ச்சைகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.மேலும் எதிர்பார்த்த அளவிற்கும் படம் வெற்றி கொடுக்கவில்லை.2018க்கு பிறகு பெரும்பாலும் ஷாமிலி படங்களில் தென்படவில்லை.இருந்தாலும் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஷாமிலி அவர்கள் ஒரு நடிகை மட்டுமில்லாமல் ஓவியரும் கூட.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் வரைந்த ஓவியத்தை She என்ற தலைப்பில் சென்னையில் கண்காட்சியாக காட்சிப்படுத்தியுள்ளார்.இதனை திரை பிரபலங்கள் பலரும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.இதனை இயக்குனர் மணிரத்தினம்,இசை அமைப்பாளர் எ.ஆர்.ரகுமான்,ஷாலினி அஜித்,சிவா,அர்ஜுன் ,விஷ்ணு போன்ற பல சினி பிரபலங்கள் கலந்து கொண்டு தனது பாராட்டை தெரிவித்தனர்.

இவ்வளவு திறமை இருந்தும் ஏன் ஷாமிலி அவர்கள் பெரிதாக தன்னை வெளிக்கொணரவில்லை என்பதற்கு பல காரணங்களை பலர் முன் வைக்கின்றனர்.அவரது தனிப்போக்கான நடத்தை,நேரம் தவறுதல்,பெரிதான ஈடுபாடு இல்லாமை,இதுவெல்லாம் தான்

இவர் சினிமாவில் நீடிக்காததற்கு காரணம் என பல விமர்சனங்கள் உள்ளன.குழந்தை நட்சத்திரமாக தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய பேபி ஷாமிலி ஒரு நடிகையாக ஏன் சாதிக்க முடியாது.இனி வரும் காலத்தில் அப்போது உள்ளது போலவே தற்போதும் அவரது அழகான நடிப்பை எதிர்பார்ப்போம்.

AvalGlitz in Social Media
Share to your pages!
Close