Aishwarya Dutta அழகின் ரகசியம் | Beauty Tips and Skincare Secrets Revealed | Glowing Skin

thumb_upLike
commentComments
shareShare

ஐஸ்வர்யா தத்தா திரைக்கு அறிமுகமானது ஒரு நடன நிகழ்ச்சியில் தான். இதனை தொடர்ந்து மாடலிங் துறையில் பங்குபெற்றுள்ள இவர், சோனி மியூசிக் ஆல்பம் சிலவற்றில் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.

null

 

அதன்பின் 2014-ம் ஆண்டு சலோ பிக்நிக் மனையின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையில் புகழ் பெற்றார்.

null

பின்னர் பாயும் புலி, ஆறாது சினம் என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகையாக முன்னேறினார். இவர் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியே இவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது.

null

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா அவரின் ஸ்கின் மற்றும் ஹேர் கேர் குறித்து நம்முடன் பகிர்ந்துள்ளார்.

ஸ்கின் கேர்

null

ஷுட்டிங் இருப்பதால் மேக்கப் போட வேண்டும், மேக்கப்பால் சருமம் பாதிக்கப்படும். அதனால் மேக்கப்பை எடுத்து விட்டு தான் நான் தூங்க செல்வேன்.

தூங்கி எழுந்ததும் சில நேரங்களில் முகம் வீங்கியது போல் இருக்கும், அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளுடன் கூடிய தண்ணீரை எடுத்து என் முகத்தை சில நிமிடங்கள் அந்த தண்ணீரில் வைத்திருப்பேன். ஐஸ் தண்ணீர் வீக்கத்தை குறைக்க உதவும்.

null

முகப்பரு வந்தால், இரவு தூங்க செல்லும்போது கோல்கேட் பேஸ்ட்டை பரு இருக்கும் இடத்தில் போட்டு விட்டு தூங்கிவிடுவேன். காலையில் முகப்பரு இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

இது தவிர்த்து என் தோல் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை தான் நான் என் சருமத்திற்கு பயன்படுத்துவேன்.

ஹேர் கேர்

null

தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை தான் நான் வீட்டில் பின்பற்றுகிறேன். கேரளாவில் இருந்து சீக்ரெட் எண்ணெய் வாங்கி பயன்படுத்துகிறேன். மற்றபடி வாரத்திற்கு ஒரு முறை என் தலைமுடிக்கு, சலூன் சென்று ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வேன்.

இதுதான் என்னுடைய ஸ்கின் மற்றும் ஹேர் கேர் என்று சிரிப்புடன் கூறுகிறார் ஐஸ்வர்யா தத்தா.

Trending Articles
South Indian Brides Who Wore Pastel Colored Silk Sarees
thumb_upLike
commentComments
shareShare
AvalGlitz in Social Media
Share to your pages!
Close