லக்ஷ்மியின் சொத்தை ஏமாற்றிய மோகன் ஷர்மா வயசான காலத்துல இதெல்லாம் எதுக்கு.

thumb_upLike
commentComments
shareShare

 

நடிகர் மோகன் சர்மா நடிகை லட்சுமி தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றி இந்தியாக்ளிட்ஸ் சேனலில் வெளிப்படையாக பேசியிருந்தார் , அதில் தன்னை படுக்கையறைக்கு கூப்பிட்டதாகவும் , லட்சுமிக்கும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு என்ன பிரச்சனை என்பது பற்றி பேசியது சமூகவலைத்தளத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியது .

இதனை தொடர்ந்து ஏற்கனவே மோகன் சர்மாவை பேட்டி எடுத்த குட்டி பத்மினி தற்போது மோகன் சர்மா பேசியதை கண்டித்தும் லட்சுமி குடும்ப வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கப்படுத்தும் நோக்கில் ஜெயந்தி கண்ணப்பனை தற்போது பேட்டி எடுத்துள்ளார் .

பேட்டியின் தொடக்கத்தில் குட்டி பத்மினி நான் வழக்கம்போல நேர்காணல் எடுக்கச்சென்ற இடத்தில் மோகன் சர்மா எதிர்பாராத விதமாக லட்சுமி மீது பல குற்றசாட்டுகளை வைத்ததாக குறிப்பிட்டார் , அதனை தொடர்ந்து மோகன் ஷர்மாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கொடுக்கும் நோக்கில் ஜெயந்தி கண்ணப்பன் பேசுகையில் லட்சுமி அக்காவை பற்றி மோகன் சர்மா இப்படி தரக்குறைவாக பேசியிருப்பது மனவருத்தத்தை அளிக்கிறது என்றும் , லட்சுமி அக்கா இதுவரை ஷூட்டிங்கில் வெளி உணவு சாப்பிட்டதே இல்லை என்றும் , பிறகு எப்படி மோகன் சர்மாவோடு ஹோட்டல் உணவு சாப்பிட்டிருப்பார் என பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளார் .

மேலும் அந்தகாலகட்டத்தில் இருந்து இன்று வரை லட்சுமி அக்கா உணவுக்கட்டுப்பாடு ஆன்மிகம் என கட்டுக்கோப்பாக வாழ்ந்துவருகிறார் , இருப்பினும் லட்சுமியுடன் மோகன் சர்மா வாழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தில் பேசப்பட்ட சில புரளிக்கதைகளை தற்போது பொதுவெளியில் பேசுவது கண்டிக்கதக்கது என ஜெயந்தி கண்ணப்பன் மோகன் சர்மாவை சாடியுள்ளார் , வயது முதிர்ந்த காலத்தில் இப்படி பேசுவது நாகரிகம் இல்லையெனவும் கூறியுள்ளார் .

கடந்த பேட்டியில் மோகன் சர்மா குறிப்பிட்ட வீட்டு பிரச்சனையில் லட்சுமி அவர்கள்தான் ஆறு லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் . மோகன் சர்மாவால் பல சொத்துக்களை தான் இழந்துவிட்டதாக லட்சுமி தன்னிடம் வெளிப்படையாக சொல்லியதாக ஜெயந்தி கண்ணப்பன் பேட்யில் சொல்லினார் . அதுமட்டும் இல்லாமல் மோகன் சர்மா லக்ஷ்மியை விட்டு பிரிந்த பிறகு இரண்டு திருமணம் செய்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார் . குறுக்கிட்டு பேசிய குட்டி பத்மினி தான் உத்தமன் லட்சுமி கெட்டவள் என மோகன் சொன்னது தவறு என்றார் .

மேலும் லட்சுமி அவருடைய மகள் ஐஸ்வர்யாவை தள்ளிவைத்து வேறு குழந்தையை தத்தெடுப்பது என்பது அவருடை தனிப்பட்ட விருப்பம் அதில் தலையிட்டு பேச யாருக்கும் உரிமையில்லை என்றும் இன்றுவரை ஐஸ்வர்யாவை அவ்வப்போது லட்சுமி கவனித்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டார் , எனவே மோகன் சர்மா தன்னுடைய குடும்பத்தில் கல்யாண வயதில் குழந்தைகளை வைத்து கொண்டு இப்படிப்பட்ட இழிவான விஷயங்களை பொதுவெளியில் பேசுவதை தவிர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளோடு பேட்டி நிறைவடைந்தது ,

மேலும் இது தொடர்பான முழு பேட்டியை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம் .

 

AvalGlitz in Social Media
Share to your pages!
Close