மது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என்றால் அதை பொதுவாக சொல்லுங்கள்.ஒரு "பொம்பளையா இருந்துட்டு குடிக்கிறீயே" என்று கேட்பது சரியா ?

thumb_upLike
commentComments
shareShare

 

 மது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என்றால் அதை பொதுவாக சொல்லுங்கள்.ஒரு பொம்பளையா இருந்துட்டு குடிக்கிறீயே என்று கேட்பது சரியா ?

சமூக சேவையாளர் மற்றும் எழுத்தாளர் கொற்றவை அவர்கள், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்

நான் முடித்த புத்தகங்கள் வெளி வந்துள்ளது.அடுத்த புத்தகம் மொழிப்பெயர்ப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது.எனக்கு சமூகப் பிரச்சினைகள் சார்ந்த பல கேள்விகள் இருந்தன.அவை அனைத்தும் என்னுடைய நிலையில் இருந்தே தொடங்கியது

.இதற்கு விடை காண நினைக்கும் போது மார்க்சியம் அறிமுகமானது.அதை படிக்கும்போது பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.நான் அறிந்து கொண்டதை பிறரும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன்.மார்க்சியம் ஒரு முழுமையான சமூக விஞ்ஞானம்.அடிப்படையில் அரசியல் பொருளாதாரத்தை தெரிந்து கொள்வது மிகவும் சிறப்பு.அப்போது தான் நாம், நம்மை பற்றிய புரிதல் கிடைக்கும்.

பெண்ணியம் என்பது பெண் நோக்கில் இருந்து பெண்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவது ஆகும்.சாதியைப் பற்றி பேசும்போது சாதியல் கல்வி என்கிறோம் அல்லவா! அதே போல் மகளிர் குறித்து படிப்பதோ பேசுவது மகளிரியல் என்கிறோம்.சமுதாயத்தில் அனைவரும் ஒரே நிலையில் இல்லை என்பதே உண்மை மற்றும் யதார்த்தம்

.ஆனால் இதை யாரும் ஏற்று கொள்வதில்லை.அப்போது தான் இங்கு நிறைய பேர் சமுதாயப் படிநிலைகளை ஆராய்கின்றனர்.அதில் வரலாற்றில் முதல் முதலாக அடிமைப்படுத்தப்பட்டது பெண்கள் தான்.அடிமைத்தனம் என்பது உன்னை விட நான் மேல்.நீ எனக்கும் கீழ் என்ற எழுதப்படாத விதியும் கூட அடிமைத்தனமே.அது சாதியாக,பாலினமாக,மதமாக, பொருளாதார ரீதியாக இப்படி பல விதமாக உள்ளது.

ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதில் தான் அவர்களுடைய சிந்தனைகள் உள்ளது.பெண் என்பவள் குடும்ப பராமரிப்புக்கு மட்டுமே.ஆண் வேலைக்கு செல்பவர்.பெண்கள் வேலைக்கு செல்வது ஒரு வித தேர்ந்தெடுக்கும் நிலையாகவே உள்ளது.ரேஷன் அட்டையில் கூட குடும்ப தலைவியின் பெயர் இருப்பது பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த ஒன்று.

பெண் என்பவள் வேலைக்கு போனாலே அவளுக்கு வேறு மாதிரியான பட்டங்கள் தான் கிடைக்கிறது.ஆணும் பெண்ணும் இருவரும் சம்பாதித்து இருவரும் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே பெண் விடுதலை சிந்தனையே தவிர பெண் ஆதிக்கத்தை குறிப்பிடுவதோ,ஆண் வெறுப்பை தூண்டி விடுவதோ பெண்ணியம் அல்ல.

மது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என்றால் அதை பொதுவாக சொல்லுங்கள்.ஒரு "பொம்பளையா இருந்துட்டு குடிக்கிறீயே"என்று கேட்காமல்"குடிக்கக்கூடாது"என பொதுவான கருத்துக்களை பதிவிடுங்கள்.நீங்கள் வைக்கக்கூடிய விதைகளை பொதுவாக வையுங்கள்.இங்கு நிறைய இடங்களில் பாலின கலப்புகள் நடக்கிறது.என‌ தனது விவாதங்களை ஆணித்தரமான பதிவு செய்த எழுத்தாளர் கொற்றவை கருத்துகளை மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Trending Articles
AvalGlitz in Social Media
Share to your pages!
Close