தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற இந்திய தமிழ் நடிகை மற்றும் கே.ஆர்.விஜயாவின் தங்கையான கே.ஆர்.வத்சலா அவர்கள், அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
அவர் பேசியதாவது,
என் குடும்பத்தில் என் அக்கா கே.ஆர்.விஜயா ஒரு ஆணுக்கு இணையாக சினிமா கலையில் நுழைந்து நடித்து பணியாற்றி என்னை படிக்க வைத்தவள்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டவள். தந்தை பல கலைகளில் திறமை வாய்ந்தவர்..வேறு சமூகத்தை சேர்ந்த தந்தை தாயாரை காதலித்து பல பிரச்சினைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் சாதி கலப்பு திருமணம் என்பது பெரிய புரட்சிக்கு ஈடானது.
அதன் பிறகு வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருந்தன.
அக்கா சினிமாவில் இருக்கும்போது அப்பா என்னை நாட்டியக் கலை கற்றுக்கொள்ள ஊக்குவித்தார். நானும் அக்காவும் கலைத்துறையில் பிரபலமான சகோதரியாக வர வேண்டும் என ஆசைப்பட்டார்.இப்போது வரைக்கும் என்னை நானே பார்த்து பராமரித்து கொள்ள நடனம் உறுதுணையாக உள்ளது.நான் எப்போதும் நடனத்தை கைவிடுவதில்லை.கல்யாணி கலாலயம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுக்கிறேன்.
அக்கா சினிமாவிற்காகவும் கலைக்காகவும் நிறைய அர்ப்பணிப்பு செய்தாள் . பெரும்பாலும் பக்தி ஆன்மிக வேடங்களில் நடித்தாள் .பல தடைகள் இருந்தாலும் இந்த துறையில் சாதிக்க முடிந்தது. இதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன் என கலை ஆர்வத்துடன் பேசி இருந்தார்.
மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.