சென்னையில் உள்ள ஆகாஷ் கருத்தரிப்பு மையத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் மகப்பேறு மருத்துவர், கருவுறாமை நிபுணர்,லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிவேதிதா காமராஜ் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,
கருத்தரிப்பு பொருத்தவரை வெளியில் சொல்லக் கூடாது என்ற அந்த மாதிரியான காலக்கட்டத்தை நாம் எப்போதே தாண்டி விட்டோம்.நீங்கள் மருத்துவரை அணுகும் போது என்ன பிரச்சினை ஆக வேண்டுமானாலும் இருக்கலாம்.தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சந்தேகமாக இருக்கலாம், கல்யாணம் ஆகி ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும்.எனவே அந்த தம்பதிகளுக்கு பிரச்சினை என்பது தாம்பத்யமே தவிர, குழந்தையின்மை அல்ல.
நீங்கள் சரியான முறையான தாம்பத்யத்தில் ஈடுபட்ட பிறகு, அப்படி இருந்தும் ஒரு வருடம் கழித்தும் குழந்தை இல்லையெனில் அதுதான் குழந்தையின்மை .
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு நிறைய தெளிவு தேவைப்படுகிறது.அப்போதே அந்த சந்தேகத்தை தீர்த்து கொள்ளாமல்,ஒரு வருடத்திற்கு பிறகு எங்களிடம் வரும்போது அவர்களை பரிசோதித்த பிறகு தான் தெரிய வரும் ,இந்த தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்சினை இல்லை .இவர்களுக்குள் சில சந்தேகங்கள் உள்ளன மேலும் தெளிவுகள் சில கிடைத்தால் இவர்களால் எளிமையாக இயற்கையாக கருத்தரிக்க முடியும் என்பது புரியும்.
மேலும் எங்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் நாங்கள் எல்லா விதமான கலந்தாய்வு நடத்துவோம்.அவர்களுடைய நடைமுறை வாழ்க்கை, தம்பதியர் உடலுறவு நிலை, மனநிலை ஆரோக்கியம் இதை எல்லாவற்றையும் கலந்தோசித்து எந்த இடத்தில் பிரச்சினை என ஆராயும்போது ஒரு அடிப்படையான வழி மற்றும் தீர்வு கிடைக்கும்.
அதன் மூலமாக நாங்கள் அவர்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு பற்றிய ஆலோசனையை வழங்குகிறோம் .பிறகு சிகிச்சைக்கான வழிமுறைகளை கூறுகிறோம் .
எல்லோருமே சிகிச்சை எடுக்க வேண்டும் அல்லது எல்லோரும் நவீன கருத்தரிப்பு முறையை பின்பற்ற வேண்டும் என சொல்வதில்லை.அந்த தேவையும் கிடையாது.ஆனால் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதாவது இதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.ஒரு பெண்ணிற்கு இரண்டு பக்கமும் கருக்குழாய்களில் அடைப்பு இருந்தால், கண்டிப்பாக நவீன சிகிச்சை முறையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதே மாதிரி ஆண்களுக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மனைவி கருத்தரிக்கும் சதவீதம் குறைவாகிறது.இதை எல்லாம் தாண்டி அவர்களுக்கு வளர்ச்சிதை மாற்ற குறைபாடு இருக்கலாம்.இல்லையென்றால் கர்ப்பப்பையில் பிரச்சினைகள் இருக்கலாம்.
ஆண்களுக்கு விந்துப்பையில் இருக்ககூடிய விந்துக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது நீந்தும் தன்மை குறைவாக இருக்கலாம். இந்த காரணத்தினால் அவர்களுக்கு காலதாமதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
கருத்தரிப்பு சிகிச்சையில் ஏதாவது பக்க விளைவுகள் இருக்கின்றனவா என பல ஆய்வுகள் மேற்கொண்டபோது அப்படி எதுவும் இல்லை என்பதே தெரிய வந்த உண்மை.அதுமட்டுமில்லாமல் கருத்தரிப்பு சிகிச்சையை பொறுத்தவரை,அதில் வழங்கப்படும் மருந்துகள் எந்த உறுப்பிற்கு செலுத்துகிக்றோமோ அந்த உறுப்பிற்கு மட்டுமே அதனுடைய பலன் போய் சேறும் .
அதை தாண்டி வேறு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.என மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ் அவர்கள் குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு சிகிச்சையை பற்றி கூறிய செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.