நாதஸ்வரம் தொலைக்காட்சித் தொடர் மூலமாக அறிமுகமாகி,பிறகு வாணி ராணி தொடரில் பிரபலமாகி,மக்கள் மனதில் இடம் பிடித்த சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியா அவர்கள் தனது இண்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த சில உணர்வுப்பூர்வமான தகவல்களை காண்போம்.
தொலைக்காட்சி தொடர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா கணவர் அரவிந்த் சேகர் தனது 30 வயதில் மாரடைப்பால் காலமானார்.பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2021ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்,இந்த துறையில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.இவர்கள் இருவரும் ஜோடியாக பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனந்தமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் வாழ்வில் பெரும் துயரமாக ஸ்ருதி கணவர் மாரடைப்பால் இறந்தார்.இது குறித்து ஸ்ருதி , நமது ஆசைகள் கனவுகள் இது எல்லாமே நிறைவேற வேண்டும் என்றால்,அந்த ஆசையை நோக்கி நாம் விரைந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போது தான் நமது இலட்சியங்களை அடைய முடியுமென்று எனது கணவர் அடிக்கடி சொல்வார் .
நான் மறுபடியும் லட்சுமி என்ற தொடரில் வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன்.என் கணவர் இப்போது என்னுடன் இல்லையென்றாலும் அவருடைய வருகையை நான் நன்றாகவே உணருகிறேன்.அவர் என்னுடன் பேசுவது எனக்கு தெரியும்.சிறு சிறு அசைவுகள் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ள முயற்சிப்பார். இதுவே எனது நம்பிக்கை.நான சன் தொலைக்காட்சியில் தொடரில் மீண்டும் உங்களை சந்திப்பேன்.என் கணவர் காட்டிய வழியிலேயே இப்போது வரை பயணித்து கொண்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
நடிகை சுருதி சண்முக பிரியா,தனது கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிடும்போது உண்மையிலேயே அதை பார்க்கும் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாத துயரமாகவே உள்ளது.கடவுளுக்கும் கண் இல்லையா?
சண்முக பிரியா கணவர் மிகவும் இளமையான வயதிலேயே இறந்து போனார்.ஏன் இப்படி ஒரு துக்கத்தை அவரது வாழ்வில் கடவுள் கொடுக்க வேண்டும்.சண்முக பிரியாவின் கனவிற்காக அவரது கணவர் என்றும் துணை நிற்பார் என்று நம்புவோம்.இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.