'என்னை போல் யாரும் இருக்க கூடாது'நடிகை ஸ்ருதி ஹாசனின் மனம் தளரா சினிமா பயணம்.

thumb_upLike
commentComments
shareShare

 

பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகளான ஸ்ருதிஹாசன் அவர்களை பற்றி காண்போம்.

நடிகை, இசையமைப்பாளர்,பாடகர் என பல்வேறு துறைகளைக் கற்று தேர்ந்து அதில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி கொண்டவர் நடிகை ஸ்ருதி.இவர் நவம்பர் 1986இல் 28ஆம் தேதி பிறந்தார்.தனது பள்ளிப்படிப்பை லேடி ஆண்டாள் பள்ளியிலும், மும்பையில் உள்ள கல்லூரியில் உளவியல் படிப்பை முடித்து பிறகு அமெரிக்க கலிபோர்னியாவில் இசையை கற்று கொண்டவர்.

என்ன தான் அப்பா ஒரு உலக நாயகனாக இருந்தாலும், தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைத்த ஸ்ருதி ஹாசன் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.அந்த வகையில்,இவர் சிறு வயதிலேயே தேவர் மகன் என்னும் படத்தில் போற்றி பாடடி என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.

பிறகு கலிபோர்னியாவில் முதுகலையில் விருப்பம் கொண்டு இசையைக் கற்ற ஸ்ருதியை , பாலிவுட்டில் இம்ரான் கான் நடிக்க ஆர்வம் உள்ளதா ? எனக் கேட்க இவர்களும் சரி எனக் கூற, தன்னுடைய முதல் படமாக பாலிவுட்டில் லக்கி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இதை தொடர்ந்து ஓ மை பிரண்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.இதையே மொழிப்பெயர்த்து தமிழில் ஶ்ரீதர் என வெளியாகின.

இதை எல்லாம் தாண்டி தந்தை கமல்ஹாசன் நடிப்பில் 2000இல் வெளிவந்த ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார்.

பிறகு 2011இல் சூர்யாவிற்கு ஜோடியாக ஏழாம் அறிவு படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகையாக அறிமுகமானார்.இவர்களின் குரலை வைத்து சில கேலி கிண்டல்களுக்கு உள்ளாகினர்.இது எதையும் பொருட்படுத்தாமல் இதிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்வேன் என கூறி 3,பூஜை,புலி,வேதாளம் போன்ற பல படங்கள் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டி கொண்டே இருந்தார்.

தேவர் மகன் படத்தில் பாட ஆரம்பித்து , வாரணம் ஆயிரம்,லக், உன்னை போல் ஒருவன் இதைப்போல் இப்போது வரைக்கும் தனது இசை ஆர்வத்தை வெளிக் காட்டியுள்ளார்.குறிப்பாக கமல் நடிப்பில் வெளிவந்த உன்னை போல் ஒருவன் என்ற படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு இசை அமைப்பாளராக அறிமுகமானார்.பொழுதுப்போக்காக விளையாட்டாக ஆரம்பித்த நடிப்புப் பயணம் தற்போது மூன்று மொழிகளில் வெற்றி நடைப் போடும் ஸ்ருதி ஹாசன்.

உங்களுடைய பெரிய இலக்கு என்னவென்று கேட்டால் ஸ்ருதி அவர்கள் எனக்கு நல்ல அம்மாவாக இருக்க வேண்டும் எனக் கூறுவர்.அதுமட்டுமில்லாமல் சினிமாவில் சர்ச்சை என்பது புதிதல்ல ..அந்த மாதிரி ஸ்ருதி ஒரு காலத்தில் காதல் சர்ச்சையில் சிக்கி , அதிலிருந்து வெளிவர முடியாமல் குடி போதைக்கு அடிமையாகியுள்ளேன் மேலும் என்னை போல் யாரும் இருக்கக் கூடாது என பல உண்மைகளை நடிகை ஸ்ருதி அவர்களே ஓபன் ஸ்டேட்மெண்ட் ஆக கூறியுள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த "இனிமேல்"பாடல் ரசிகர்கள் பலரை ஆரவாரப்படுத்தியது.இருப்பினும் சில சர்ச்சைகளும் நிலவியது.அந்த வகையில் ஸ்ருதி ஹாசன் கொடுத்த நேர்காணலில் ' ஒரு காலத்தில் நாம் கடந்து வந்த விஷயத்தை மற்றும் தவறை இனிமேல் செய்யக் கூடாது என்று நினைப்போம் .ஆனால் அதே தவறை அடுத்த வாரத்தில் திரும்பவும் செய்வோம்.இதுதான் ஒரு மனித இயல்பு.இந்த லூப் வாழ்க்கையை உடைக்க வைக்கும்.இந்த பாட்டில் இவை தான் காண்ஸப்ட ' எனக் கூறியுள்ளார்.

தன்னுடைய பின்புலத்தில் எத்தனையோ வசதிகள் அதிகாரம் இருந்தாலும் தன்னை தானே செதுக்கிக் கொண்டு, எனக்கென்று ஒரு பாதையை மேலும் அங்கீகாரத்தை உருவாக்கி கொள்வேன் என இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

AvalGlitz in Social Media
Share to your pages!
Close