திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரியங்கா நல்காரி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

thumb_upLike
commentComments
shareShare

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரியங்கா நல்காரி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பற்றி காண்போம் ‌‌.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்னும் தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் சின்னத்திரை நடிகை பிரியங்கா, நீங்கள் சிங்கிளா என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரியங்கா அளித்த பதில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏனென்றால் பிரியங்கா ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்கும்போதே ராகுல் என்பவரை காதலித்து இருவரும் மனம் ஒத்து தங்களது திருமணத்தை மலேசியாவில் மிகவும் எளிமையாக முடித்து கொண்டனர்.

ஆனால் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பிரியங்கா சீதாராமன் சீரியலில் இருந்து மொத்தமாக விலகினார்.தனது கணவர் மலேசியாவில் இருப்பதாகவும் அதனால் எனக்கும் அவருக்கும் சில இடைவெளிகள் இருக்கிறது அதனாலே நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று காரணமும் கூறினார்.

சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் நளதமயந்தி என்னும் தொடரில் கதாநாயகியாக நடிக்க முன்வந்தார் பிரியங்கா.அந்த சமயத்தில் பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவருடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டனர்.பிரியங்காவின் கணவரும் அதே போல் செய்தார்.

இதனால் பலருக்கு இந்த ஜோடி பிரிந்து விட்டார்களோ என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்த நேரத்தில் தான்,ரசிகர் சிங்கிளா என்று கேட்ட கேள்விக்கு பிரியங்கா அளித்த பதிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது தெரிகிறது.ஆனால் அதற்கான காரணத்தை நடிகை பிரியங்கா இதுவரை தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் நான் இன்ஸ்டாவில் இருத்து நிரந்தரமாக வெளியேறுகிறேன் என்று பிரியங்கா டோட்ட இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்கள் பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

AvalGlitz in Social Media
Share to your pages!
Close