நடிகை மதுமிளா நீண்ட காலம் சினிமா துறையில் இருந்து விலகி இருக்க காரணம் இதுதானா ?

thumb_upLike
commentComments
shareShare

 நடிகை மதுமிளா நீண்ட காலம் சினிமா துறையில் இருந்து விலகி இருக்க காரணம் இதுதானா ?

பூஜை, ரோமியோ ஜூலியட்,மாப்ள சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபிஸ் சீரியலில் சின்னத்திரை நடிகையாக களமிறங்கிய நடிகை மதுமிளா அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

நான் திருமணத்திற்கு பிறகு கனடாவிற்கு குடிபெயர்ந்து விட்டேன். இதனால் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது.சினிமாவில் வந்து இதுவரை இருப்போம், இருந்து நடிப்போம் என்று சில திட்டங்கள் ஏற்கனவே இருந்தது.சினிமாவை எதிர்கால இலட்சியமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

நட்பில் ஆரம்பித்து பிறகு காதலாக மலர்ந்து இருவர் வீட்டிலும் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டோம்.திருமணத்திற்கு பிறகு சினிமா துறையை விட்டு விலகியதற்கு துளியும் வருத்தப்படவில்லை.கல்லூரியில் படிக்கும்போதே எனக்கெல்லாம் கல்யாணம் ஆகி இருக்க வேண்டியது.தொடர்ந்து வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள எனது அம்மாவுடன் சில ஒப்பந்தங்கள் பேசி பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன்.

சுதந்திரம் என்பது தான் ஒரு பெண்ணிற்கு அதிக அளவில் சந்தோசத்தை தருகிறது.நான் சந்தோஷமாக இருந்தால் தான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அதே இன்பத்தை என்னால் பிரதிபலிக்க முடியும்.இங்கு இவர்களுக்கு கீழ் அவர்களுக்கு கீழ் என்று எதுவுமே இல்லை.

என்னுடைய கணவர் பொருளாதார ரீதியாக குடும்பத்தைப் பார்த்தால் நான் மீதி உள்ள விஷயங்களைப் பார்த்து கொள்வேன்.என்னுடைய வேலையை என்னால் சரியாக செய்ய முடியுமென்றால் அதுதானே சுதந்திரம்.மேலும் என் திருமண வாழ்க்கை மிகவும் சுமூகமாக போய் கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரம் நடிக்க ஆசைப்பட்டேன்.ஆனால் படம் பார்த்தப் பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை திரிஷா மட்டுமே தகுந்த ஒரு நடிகை என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த ஒரு நிகழ்வு என்னை மிகவும் வருத்தப்படச் செய்தது.இவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கோமே ! என்று மனதளவில் வருத்தப்பட்டேன்.

காக்கா முட்டை திரைப்படம் நடிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தேன்.ஆனால் சரியான அறிவுரை இல்லாத காரணத்தினால் அந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டேன்.இதை எல்லாம் தாண்டி நான் வெற்றிகரமாக இருக்க என் அம்மாவே முழு காரணம். என தன்னுடைய பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த நடிகை மதுமிளா பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
 

Trending Articles
AvalGlitz in Social Media
Share to your pages!
Close