தொடர்ந்து நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நித்யா பாலாஜி எழுப்பிய கேள்விகள்.

thumb_upLike
commentComments
shareShare

தொடர்ந்து நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நித்யா பாலாஜி எழுப்பிய கேள்விகள்.

 

ஆர்.ஜே.பாலாஜியின் மனைவி மற்றும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்களித்த நித்யா பாலாஜி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

நான் நல்லா இருக்கேனான்னு கேட்டால் இல்லை. ஏனென்றால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத பல கொடுமைகள் சமுதாயத்தில் நடந்து கொண்ட வருகிறது.கங்கா மாதா பாரத மாதா என பெண்களை பல்வேறு விதமாக போற்றி புகழும் இதே சமுதாயத்தில் இந்த மாதிரியான பாலியல் வன்கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டே இருக்கிறது.

இது மனதிற்கு மிகவும் வேதனை தருகிறது.நான் மட்டும் இல்லை இந்தியாவில் உள்ள எந்த ஒரு பெண்ணும் இங்கு நல்லாவே இல்லை.பெண்களை தாண்டி இப்போது குழந்தைகளையும் விட்டு வைக்காத மிருகத்தனம் அதிகரித்து கொண்டே உள்ளது.

ஒரு அம்மாவாக நின்று பார்க்கும் போது புதுச்சேரியில் சிறுமி ஆர்த்திக்கு நடந்த சம்பவம் உண்மையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அடிப்படையில் நான் ஒரு தைரியமான அம்மா .ஆனாலும் ஒரு பெண் பிள்ளைக்கு அம்மாவாக இருந்து யோசிக்கும்பொழுது மிகவும் பயமாக உள்ளது.தற்போதைய தலைமுறை வழிமுறைகள் எதுவுமே சரி இல்லை.எனக்கு இருக்கும் கோபத்திற்கு அந்த நபர்கள் எல்லாம் கையில் கிடைத்தால் நானே கொன்று விடுவேன்.

அந்த குழந்தை பிறந்து வளர்ந்ததிலிருந்து பார்த்து பழகிய நெருங்கிய ஆட்களே இது போல் நடந்து கொண்டால் நாம் யாரை நம்பி குழந்தையை விட முடியும் மேலும் நம்மால் இதை பற்றி பேசி விவாதிக்க மட்டுமே முடியும் ஆனால் கையில் அதிகாரம் உள்ளவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு மறக்கமுடியாத ஆணித்தரமான தண்டனைகளை கொடுத்தால் தான் திரும்பவும் இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.இந்த சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரை சேர்ப்போம் என்று நினைக்கும்போது மிகவும் பதற்றமாக உள்ளது.மறுப்பக்கம் ஒரு சிறுமியாக ,பெண்ணாக ,வயதான மூதாட்டியாக ,ஒரு டிராவலராக யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லையெனில் இது மொத்தமாக பாதுகாப்பற்ற இந்தியாவாக தெரிகிறது .

புதுச்சேரி சிறுமி ஆர்த்தியின் பெற்றோர்கள் கதறும் காணொளியை பார்த்து மனம் பதறியது .ஒரு வயதான தாத்தா மற்றும் 19வயது பையன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைகள் செய்கிறார்கள் அப்படியானால் எதை நோக்கி சமுதாயம் செல்கிறது என தோன்றியது .

ஆபாச வீடியோக்களை பார்த்து தன்னுடைய உணர்வுகளை அடக்கி கொள்ளாமல் பார்க்கும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாம் இப்படி கற்பழித்து கொலை செய்வதையெல்லாம் பார்க்கும் போது நாம் இந்தியர்கள் என சொல்லவே வெட்கப்பட வேண்டும் .

ஸ்பானிஷ் தம்பதிக்கு நடந்த அநீதியில் கூட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பத்து இலட்சம் நஷ்ட ஈடு கொடுத்துள்ளனர் .ஆனால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்பது வெளியில் தெரியவே இல்லை.சமீபத்தில் நடந்த செங்கல்பட்டு பாலியல் வழக்கில் குற்றவாளிகள் யார் என்று பகிரங்கமாக தெரிந்தாலுமே தலைமறைவான நபர்களை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்.ஒரு அரசு பள்ளியில் நடந்த அநியாயத்தை, இப்போது வரையிலும் பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது.இதுவே தனியார் பள்ளியாக இருந்தால் எந்த அளவுக்கு இந்த விஷயத்தை பூதாகரமாக உரூவாக்கி இருப்பார்கள்.எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த சம்பவத்தின்போது அந்த பள்ளியே எரித்தார்கள்.ஆனாலும் கூட இங்கு யாருக்கும் இதுவரை கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கவில்லை.

மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது வெறி பிடித்த மிருகமாக அலைகிறார்கள்.இதையெல்லாம் தடுக்க தகுந்த விழிப்புணர்வு மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் மிகவும் கொடுரமாக மாற வேண்டும். என நித்யா பாலாஜி தன் ஆதங்கத்தை சரமாரியான கேள்விகள் மூலம் வெளிப்படுத்தினார்..இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

 

AvalGlitz in Social Media
Share to your pages!
Close