திரைப்பட நாயகி மற்றும் நடன தாரகை மேஜிக் ராதிகா பகிர்ந்த பல நெகிழ்ச்சியான கலைத்துறை தகவல்கள்.

thumb_upLike
commentComments
shareShare

 

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படக் கதாநாயகியாகவும்,நடனத்தில் சிறந்தவராகவும்,வில்லியாகவும் நடித்த மேஜிக் ராதிகா அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

எனக்கு பள்ளி பருவத்திலேயே மேஜிக் என்றால் மிகவும் பிடிக்கும்.ஆனால் என் பெற்றோர்கள் அந்த மாதிரியான ஒரு கடுமையான கலை வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.மற்றப்படி நான் கராத்தே பயிற்சி மற்றும் கிளாசிக்கல் டான்ஸ் போன்ற கலைகளையெல்லாம் கற்றுக்கொண்டேன்.

பிறகு நாளடைவில் நான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன்.அந்த படத்தில் எனக்கு அப்பாவாக நடித்த ரமணா ரெட்டி அவர்களுக்கு மேஜிக் நன்றாக தெரியும்.எனவே நான் அவரிடம் தான் மேஜிக் கற்றுக்கொண்டேன்.அவர்கள் தான் என்னுடைய குரு. எனக்கு மேஜிக் ராதிகா என்ற பெயரை வைத்ததே பப்ளிக் தான்.அந்த சமயத்தில் சினிமா துறையில் இரண்டு ராதிகா இருந்தோம் அல்லவா ! எனவே எனக்கென்று தனியான அடையாளத்திற்காக மக்கள் சூட்டிய பெயர் தான் மேஜிக் ராதிகா.

மேலும் இப்போது இந்த துறை மிகவும் எளிமையாக இருக்கு என்று நினைக்கிறேன்.ஆனால் அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது ஒரு டயலாக் விட்டோம் என்றால் திரும்பவும் ரீடேக் தான்.நான் தூர்தர்ஷனில் நிறைய செய்து இருக்கிறேன்.அதே போல் முன்பு இருந்த படத்தில் எல்லாம் ஒரு செய்தி இருக்கும்.தற்போது உள்ள படத்தில் அப்படி இல்லை.எல்லாமே பொருளாதார ரீதியாக வேகமாக ஓடி கொண்டிருக்கிறார்கள்.ஒரு நல்ல கதையை நாம் பார்க்க முடியவில்லை.
அந்த காலத்தில் பாசமலர்,பாவ மன்னிப்பு என்ற முத்திரை பதித்த எத்தனையோ திரைப்படங்கள் உள்ளன.அருமையான நடிகர் மற்றும் நடிகைகள்.

என்னுடைய முதல் படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலக்கிருஷ்ணன் அவர்களுடைய படம் தான்.அதில் மிதிவண்டியை கையை விட்டு ஓட்டுவது, நீச்சல்,கார் ஓட்டுவது போன்ற அவர் படத்திற்கு என்னலாம் தேவையோ அவை அத்தனையும் கேட்டார்.அதையெல்லாம் நான் செய்தேன்.ஆடிஷனில் ஒரு பதினைந்து பெண்கள் வந்திருந்தனர்.கடைசியில் அதில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

நான் ஜெமினி கணேசன் அண்ணா கூட நடிக்கும்போது,அதில் நடிக்கக் கூடிய எல்லோரும் சீனியர் .நான் மட்டும் தான் ஜுனியர் மற்றும் புதுமுக நடிகை.மிகவும் பயந்து கொண்டே நடித்தேன் .இப்போது பார்த்தால் கூட ஆச்சரியமாக இருக்கும்.விஜயா அக்காவெல்லாம் என்னை மிக நன்றாக பார்த்துக் கொண்டார்.படம் முழுவதும் எனக்கு சப்போர்ட்டாக ஊக்கம் அளித்தார்.

ஏழு மணிக்கு ஷுட்டிங் என்றால் சிவாஜி அண்ணா சரியாக அந்த நேரத்திற்கு வருவார் .அதனாலேயே நாங்கள் எல்லோரும் கொஞ்சம் முன்னதாக கிளம்பி போய் அங்கு இருப்போம்.

அந்த அளவிற்கு எங்களுக்கு அவர்கள் மீதும் ,இந்த துறையின் மீதும் ஒரு பக்தி.மேலும் சிவாஜி அண்ணா கூட நடித்ததெல்லாம் ஒரு அழகான நெகிழ்ச்சியான அனுபவம் என்று மேஜிக் ராதிகா அவர்கள் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் .

AvalGlitz in Social Media
Share to your pages!
Close