பெண்கள் மீதான வன்முறை என்பது வளர்ந்த நாடு முதற்கொண்டு வளர்ந்து கொண்டு வரும் நாடுகள் வரையிலும் பெண்கள் மீது கடும் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இது சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படுகிறது என்பது பெரும் வேதனைக்குரிய விஷயம்.
பொதுவாக ஆணாதிக்கம் என்பது பல குடும்பங்களில் வேர் ஊன்றி உள்ளது. பெண்கள் சிறுவயது முதலே தன் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே பல வன்முறைகளை எதிர்கொள்ளுகின்றனர். தன்னுடைய மாமா , அப்பா, மாமனார் , தன்னுடைய கணவர் மூலமாகவே வன்புணர்வு செய்யப்படுகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறை என்பது பல வகைகளில் உள்ளது. உடல் அளவில் , மனதளவில், பொருளாதார அடிப்படையிலும் நடக்கின்றது. மேலும் பல பெண்கள் இதனை பற்றி வாய் திறப்பதே இல்லை என்பது வேதனையின் உச்சம்.
பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை தன் வாழ் நாள் முழுவதும் எதிர்கொண்டுவருகின்றனர். 2022-ம் ஆண்டு தேசிய ஆய்வு அறிக்கையின் படி திருமணமான பெண்கள் தன்னுடைய கணவர்களினாலே 82% வன்புணர்வு செய்யப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர். திருமணம் ஆகாத பெண்கள் தன் ஆண் நண்பர்களினால் பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறையை பற்றி பெண்கள் வாய்திறப்பதே இல்லை மேலும் அதனை வெளியில் சொன்னால் குடும்பம் சீர்குலைந்து விடும் மேலும் அப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மேலும் அப்பெண்கள் படிப்பிலாத காரணத்தால் தான் பொருளாதார ரீதியாக கணவரை அஞ்சி வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான வன்முறையை சிறுவயது முதலே பள்ளியில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். Good Touch, Bad Touch எது என்று பள்ளியிலும் பெற்றோர்கள் தன் வீட்டிலும் சொல்லித்தரவேண்டும். பெண்களுக்குகோ குழந்தைக்கோ பாலியல் நேர்ந்தால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் குற்றவாளியின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.